தமிழக அரசு சித்தாவின் முக்கியத்துவம் பற்றி நிரூபிக்க ஐகோர்ட்டு ஒரு வாய்ப்பு தந்துள்ளது - அமைச்சர் கே.பாண்டியராஜன்.! #Covid19 @mafoikprajan
தமிழக அரசு சித்தாவின் முக்கியத்துவம் பற்றி நிரூபிக்க ஐகோர்ட்டு ஒரு வாய்ப்பு தந்துள்ளது - அமைச்சர் கே.பாண்டியராஜன்.! #Covid19 @mafoikprajan

இந்தியாவில் ஒருங்கிணைந்த மருத்துவப் படிப்பு இல்லாத காரணத்தாலேயே, தமிழகத்தில் சித்த மருத்துவம் மீது சந்தேகப் பார்வை உருவாகியுள்ளது என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா சித்தா மருத்துவமனையில் உயர் அதிகாரிகளுடன் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சித்த மருத்துவம் சார்பில் 35-க்கும் மேற்பட்ட ஆய்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் 7 ஆராய்ச்சிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் ஒருங்கிணைந்த மருத்துவப் படிப்பு இல்லாததே சந்தேக பார்வைக்கு காரணம். தமிழக அரசு சித்தாவை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுத்துள்ளது. அதனை நிரூபிக்க ஐகோர்ட்டும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.