இந்தியாவில் பசு பாதுகாப்பு - பிரமிப்பூட்டும் புனித வரலாறு
இந்தியாவில் பசு பாதுகாப்பு - பிரமிப்பூட்டும் புனித வரலாறு
By : Kathir Webdesk
இந்தியாவில் பசு பாதுகாப்பிற்கு தரப்படும் முக்கியத்துவத்திற்கு நீண்ட வரலாறு உள்ளது. இன்று பலர் சொல்வது போல் வேத காலத்தில் பசுவை உண்ணும் பழக்கம் உள்ளது என சொல்லப்பட்ட போதிலும், வேத கால ஆரியர்கள் மத்தியில் பசுவை வழிப்பட்டனர் என்பதற்கு சான்றுகள் உள்ளன. யாகங்களின் போது பிராமணர்களுக்கு பசுவை தானமாக அளித்துள்ளளனர். தெய்வங்கள் தேவதைகள் பசுவோடு இணைத்து பேசப்பட்டிருக்கிறார்கள். வேத காலத்தில் பசுவின் மூலம் பெறப்பட்ட பால் போன்ற பொருட்கள் அதீத முக்கியத்துவம் பெற்றிருந்தன.
பின்னாட்களில் இந்திய தேசத்தில் தோன்றிய பல நூல்கள் பசுவின் முக்கியத்துவத்தை பற்றி பெரிதும் பேசுகின்றன. சாணக்கியரின் அர்த்த சாஸ்த்திரம் பசுவை கொல்வதை பெறும் குற்றமாக கண்டிக்கிறது. மனுஷ்மிருதி பசுக்கொலையை குற்றமாக கருதுகிறது. மஹாபாரதத்தில் ஒருவன் பசுக்கொலை செய்தால் பசுவின் உடலில் எத்தனை ரோமங்கள் உள்ளனவோ அத்தனை வருடம் நரகத்தில் உழல வேண்டும் என்று கூறுகிறது.
பசுவின் புனிதத்துவதையும், மகத்துவத்தையும் புராணங்கள் நிறைய பேசுகின்றன. ராமாயணத்தில் வரும் வஷிஷ்டருடைய பசுவான காமதேனுவின் பெருமைகள் பற்றி ராமாயணம் படித்தால் தெரிந்து கொள்ளலாம். மஹாபாரதத்தில் நந்தினி என்ற தெய்வீக பசுவை பற்றியும் வருகிறது.
பின்னாளில் இஸ்லாமியர்கள் ஆட்சியின் போது பசுக்கொலை என்பது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரமாக நடைபெற்றது. பசு இந்துக்களின் வணக்கத்திற்குரியது என்பதாலேயே பசுக்கள் அதிகமாக கொல்லப்பட்டன. மேலும் இஸ்லாமியர்களின் உணவு பழக்கத்தில் பசு இன்றியமையாத
ஒன்றாகவும் இருந்தது. இதன் காரணத்தினால் அந்த கால கட்டத்தில் இந்துக்கள் பசுக்களை பாதுகாப்பதற்காக கடுமையான எதிர்ப்பை காட்டினார்.
இஸ்லாமிய எதிர்ப்பின் வலிமையான அடையாளமாக திகழ்ந்த விஜயநகர மன்னர்கள் தங்கள் பெயரோடு "கோ பிராமண பிரதி பாலாச்சாரியான்" அதாவது பசுக்களையும் பிராமணர்களையும் ரட்சிப்பவன் என்ற பட்டத்தை ஏற்று கொண்டனர். பின்னாட்களில் மராட்டிய சாம்ராஜ்யமும் சீக்கிய அரசும் வலிமை பெற்ற போது பசுக்கொலை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர் வந்தபிறகு இந்த நிலைமை மாறியது.
முன்பு இருந்ததை விட இப்போது பசு பாதுகாப்பு என்பது மேலும் சிக்கலாகி போனது . குறிப்பாக இந்தியாவில் பஞ்சாப் மாகாணத்தில் பசு பாதுகாப்பு என்பது பிரிட்டிஷ் வருகைக்கு பின் பெரும் மாற்றம் கண்டது. பூஜா சிங் என்ற சீக்கியரின் தகவலின் படி பஞ்சாபில் சீக்கியர்களின் கை ஓங்கியிருந்த முக்கால் நூற்றாண்டு காலத்தில் எந்த இஸ்லாமியரும் பசுவை உணவாக உண்ணவில்லை. ஆங்கிலேயர்கள் காலத்தில் அன்றைய ஒருங்கிணைத்த பஞ்சாப் மாகாணத்தின் அம்ரிஸ்டர் மற்றும் யாகூர் ஆகிய சீக்கியர் அதிகம் வசிக்கும் இடங்களில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக பசு வதைக்கு எதிராக பல போராட்டங்கள் நடந்துள்ளன சில மகாண கவர்னர்கள் பசுக்கொலையை தவிர்க்குமாறு அறிவுறுத்தியும் உத்தரவிட்டும் கூட இருக்கிறார்கள் பின்னாளில் 1857 சிப்பாய் கலக்கத்தில் கூட இந்த பிரச்சனையே மூலகாரணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி : ப்ரக்யதா