தேசிய நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு அறிமுகம் செய்ய இருக்கும் அசத்தல் முன்னோடி திட்டம் - பயனடையப்போவது யார்?
தேசிய நெடுஞ்சாலைகளில் மூங்கில் தடுப்பு வேலிகள் அறிமுகம் செய்ய இருப்பதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல் தெரிவித்துள்ளார்.
By : Karthiga
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டிலுள்ள விரைவு சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் மூங்கிலால் செய்யப்பட்ட தடுப்பு வேலிகளை அமைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வகை தடுப்பு வேலிகள் முதன்முறையாக பரிசோதிக்கப்படுகிறது. அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டு இரும்புக்கு பதிலாக மூங்கில் தடுப்பு வேலிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன.
இந்த முன்னோடி திட்டத்தை முதற்கட்டமாக சத்தீஸ்கார் மாநிலத்தில் நிறுவ முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அது வெற்றியடைந்தால் நாடு முழுவதும் இரும்பு தடுப்பு வேலிகளுக்கு பதிலாக மூங்கில் தடுப்பு வேலிகள் நிறுவப்படும். இந்த மூங்கில் தடுப்பு வேலிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும். மேலும் இதன் மூலம் பழங்குடியினர் பகுதிகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும். பழங்குடியினரும் கிராமப்புற மக்களும் பயனடைவார்கள் இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.
SOURCE :DAILY THANTHI