கைவினை கலைஞர்களுக்கு பலன்களை அள்ளித் தரும்'விஸ்வகர்மா திட்டம்': மத்திய அரசு அறிவிப்பு
பிரதமர் மோடி கைவினை கலைஞர்களுக்கான விஸ்வகர்மா என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.
By : Karthiga
பிரதமர் மோடி சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி உரையாற்றினார். அப்போது கைவினை கலைஞர்களுக்காக 'விஸ்வகர்மா ' என்ற புதிய திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடந்தது அதில் விஸ்வகர்மா திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது .இது குறித்து மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது :-
பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் ரூபாய் 13,000 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தால் நெசவாளர்கள், பொற்கொல்லர்கள், சலவை தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள் என சுமார் 30 லட்சம் பாரம்பரிய கைவினை கலைஞர் குடும்பங்கள் பலனடையும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே திட்டத்தில் பலன் அடையலாம்.
இதன்படி கைவினை கலைஞர்களுக்கு முதல் தவணையாக ரூபாய் ஒரு லட்சம் கடனும் இரண்டாவது தவணையாக 2 லட்சம் கடனும் அளிக்கப்படும். ஐந்து சதவீத வட்டியில் இந்த கடன் அளிக்கப்படும் மேலும் கைவினை கலைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியின்போது நாள் ஒன்றுக்கு ரூபாய் 500 உதவி தொகை அளிக்கப்படும் .விஸ்வகர்மா ஜெயந்தி அன்று செப்டம்பர் 17ஆம் தேதி இத்திட்டம் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :DAILY THANTHI