ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர் - தேடப்படும் குற்றவாளிகள்!
ஐந்து ரூபாய் பிரச்சினைக்காக ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்.
By : Bharathi Latha
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ரவி யாதவ் என்பவர் சனிக்கிழமை புதிதாக எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். மேலும் இவர் ரயிலில் பயணம் செய்யும் போதுதான் இந்த ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. ரயில் ஜிரோலி கிராமம் அருகே வந்தபோது, ரயில் ஊழியர் ஒருவரிடம் தண்ணீர் பாட்டில் வாங்கியிருக்கிறார். 15 ரூபாய் தண்ணீர் பாட்டிலுக்கு 20 ரூபாய் வேண்டுமென அந்த ஊழியர் கேட்டிருக்கிறார். மேலும், அவர் பான் மசாலா போட்டுக்கொண்டு ரயிலிலேயே துப்பிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் ரவி யாதவ் தண்ணீர் பாட்டில் 15 ரூபாய் குறிப்பிடப்பட்டிருப்பது சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார் மேலும் 15 ரூபாய் தருவதாகவும் வாக்குவாதம் செய்து இருக்கிறார் மேலும் பான் மசாலா எச்சில் துப்பியது தொடர்பாகவும் கேட்டிருக்கிறார். தண்ணீர் பாட்டில் இந்தச் சூழலில், ரவி யாதவ், அவரின் சகோதரியுடன் லலித்பூர் ஸ்டேஷனில் இறங்க முயன்றபோது, ரயில் ஊழியர் தன்னுடன் பணிபுரியும் சிலரை அழைத்துக்கொண்டு அவர்களை இறங்கவிடாமல் தடுத்திருக்கிறார்.
மேலும், ரயில் லலித்பூர் ஸ்டேஷனைக் கடந்ததும் ஓடும் ரயிலிருந்து ரவி யாதவைத் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பியிருக்கிறார்கள். ஓடும் ரயிலிலிருந்து தூக்கி வீசப்பட்டதால், பலத்த காயமடைந்த ரவி யாதவை உள்ளூர் மக்கள் மீட்டு ஜான்சி மருத்துவக் கல்லூரியில் அனுமதித்திருக்கிறார்கள். ரயில் அவரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
Input & Image courtesy: Vikatan News