எஸ்.ஐ மீது பாலியல் புகார் அளித்த மாணவி மீது கொடுமையான தாக்குதல்
எஸ்.ஐ மீது பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்த கல்லூரி மாணவி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By : Mohan Raj
எஸ்.ஐ மீது பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்த கல்லூரி மாணவி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல் உதவி ஆய்வாளர் மீது பாலியல் புகார் அளித்த கல்லூரி மாணவி அவரது தாய் மற்றும் உறவினர்கள் சேர்ந்து புகாரை வாபஸ் பெற வலியுறுத்தி அந்த அப்பாவி மாணவியை தாக்கி உள்ளனர்.
பாதுகாப்பு பிரிவில் எஸ்.சி.பி உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பாண்டியராஜ் தனது தாயுடன் பழக்கத்திலிருந்து போது தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், தற்பொழுது மீண்டும் தன்னுடன் வரும்படி மிரட்டுவதாகவும் கல்லூரி மாணவி ஒருவர் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தில் பாண்டிராஜ் கைது செய்யப்பட்டார். இந்த செய்தியை வெளியான சமயம் முதல் தொடர்ந்து மாணவியை அவரது தாய் மற்றும் உறவினர்கள் புகார் வாபஸ் பெற கூறி தாக்கியுள்ளனர். தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.