பெருகி வரும் சைபர் குற்றங்கள் - முகத்தை மார்பிங் செய்து பெண்களை குறிவைக்கும் கும்பல்
முகத்தை மார்பிங் செய்து கல்லூரி மாணவிகள்,வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஆபாச படங்களை அனுப்பும் மோசடி நபர்களின் தொந்தரவுகள் பெருகி வருகின்றன.
By : Karthiga
முகத்தை மார்பிங் செய்து கல்லூரி மாணவிகள் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஆபாச படங்களை அனுப்பும் மோசடி நபர்களின் தொந்தரவுகள் பெருகி வருகின்றன. இதனால் பெண்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். நமது நாட்டின் மொத்த மக்கள் தொகை 138 கோடி இதில் 55 கோடி பேர் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகிறார்கள். பெருகிவரும் இணையதள பயன்பாட்டுக்கு ஏற்ப ஆன்லைன் மோசடிக்காரர்களும் புது புது அவதாரம் எடுத்து தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் தான். தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களின் எண்ணிக்கை 748 .
இது 2021 ஆம் ஆண்டு 13 ஆயிரத்து 777 ஆக உள்ளது. 10 ஆண்டுகளில் மட்டும் சைபர் குற்ற புகார்களின் எண்ணிக்கை 1,648 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கல்லூரி மாணவிகள் வேலைக்கு செல்லும் பெண்களை குறி வைத்து சென்னையில் சமீப காலங்களில் மோசடி பேர்வழிகள் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் .செல்போன் எண்களை திருட்டுத்தனமாக பெற்று 'மார்பிங்' செய்யப்பட்ட அவர்களுடைய ஆபாச புகைப்படங்களை அனுப்பி வேறு யாருக்கும் அனுப்பாமல் இருக்க வேண்டும் என்றால் கணிசமான அளவுக்கு தொகை தர வேண்டும் என்று மிரட்டுவது உட்பட பல்வேறு குற்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோன்ற ஒரு கொடூரம்தான் சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் நேர்ந்தது .எம் .எஸ் .சி உளவியல் படித்துவிட்டு அந்தப் பெண் தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். பெண்ணின் செல்போன் எனக்கு புதிய செல்போன் எண்ணில் இருந்து' வாட்ஸ் அப்பில்' ஒரு ஒரு படம் வந்தது. அதனை பதிவிறக்கம் செய்தபோது பெண்ணுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவளுடைய முகம் மார்பிங் செய்யப்பட்டு ஆபாச படம் உடன் இணைக்கப்பட்டிருந்தது.உடனே இந்த செல்போன் என்னை பிளாக் செய்துவிட்டார் . சுதாரித்துக் கொண்ட மோசடி நம்பர் உடனே அந்த படத்தை வாட்ஸ் அப்பில் இருந்து அழித்து விட்டார்.
இதை அடுத்து இன்ஸ்டாகிராமில் ஐ.டி ஐ திறந்து அந்த பெண்ணின் தோழிகளுக்கு மார்பிங் செய்யப்பட்ட அதே படங்களை பகிர்ந்துள்ளார். இதனால் அந்த பெண் மேலும் அதிர்ச்சி அடைந்தார். இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் தன்னுடைய குடும்பத்துக்கு தலைகுனிவு வந்து விடுமோ என்று முதலில் பயந்த அந்த பெண் பின்னர் தைரியமாக சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இதை அடுத்து இன்ஸ்டாகிராமில் இருந்து இந்த மோசடிக்காரன் வெளியேறி விட்டான். சமூக ஊடகங்களின் வாயிலாக தொல்லைகள் கொடுக்கப்பட்டதால் அந்த பெண் தற்போது வேலைக்கு செல்வதையை நிறுத்திக் கொண்டார்.
பெண்ணின் பெற்றோரும் தங்கள் பிள்ளைக்கு பாதுகாப்பு இல்லையே என்பதை நினைத்து வேதனையில் உள்ளனர். பெண்களை சமூக ஊடகங்களின் மூலமாக மிரட்டி தொடர்ந்து தொந்தரவு கொடுக்கும் நபர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இது போன்ற ஒரு துயரம் மேலும் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் காவல்துறை உறுதியாக இருக்க வேண்டும் .நமது நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை பெண் ஒருவர் அலங்கரிக்கிறார். அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறி விட்டார்கள் என்று மார்தட்டி கொள்ளும் நாம் இதுபோன்று பெண்களின் பாதுகாப்புக்கு ,வளர்ச்சிக்கு, கண்ணியத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் மோசடிக்காரர்களை வேரிலிருந்து வெட்டிய வேண்டும். அப்போதுதான் பெண்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் பாலின வேதமின்றி நிமிர்ந்து முன்னோக்கி வீரநடை போட முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.