சிவன், விஷ்ணு பிரம்மா ஆகிய மூவரும் ஓர்உருவாக காட்சி தரும் 'தத்தநாராயணர்'
கர்நாடக மாநிலத்தில் சிவன் விஷ்ணு பிரம்மா ஆகிய மூவரும் சேர்ந்து ஒரே உருவமாக காட்சி தரும் வித்தியாசமான தத்தாத்ரேயர் சன்னதி உள்ளது.
By : Karthiga
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் இருக்கிறது பாதாமி என்ற நகரம். மணற்கல்கல் பாறைகளில் ஏற்படுத்தப்பட்ட குடைவரை கோவில்களுக்கு, பாதாமி சிறப்புக்குரியதாக விளங்குகிறது. இங்கு நான்கு குகைகள் இருக்கின்றன. அதில் அமைந்துள்ள பூதநாத் என்ற சிவன் கோவிலுக்கு செல்லும் வழியில் 'தத்த நாராயணர் ,கோவில் இருக்கிறது. தனியாக திறந்தவெளியில் சிறிய சன்னிதிக்குள் இருக்கும் இந்த தத்த நாராயணன் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் ஓர் உருவாக காட்சி தரும் கோலமாகும்.
பாதாமியில் அனைத்தும் குடைவரைக் கோவிலாக இருக்கும் பட்சத்தில் இந்த ஆலயம் மட்டும் தனியாக கருங்கல்லில் செய்யப்பட்ட சிற்பமாக இருக்கிறது. இந்த பகுதியில் நடைபெற்ற ஒரு போரில் இந்த சிலையை வழிபட்டு வந்தவர்கள் இங்கு வந்து தஞ்சம் அடைந்து கோவில் அமைத்ததாக சொல்லப்படுகிறது. பெரும்பாலும் தத்தாத்ரேயர் என்பவர் மூன்று தலைகள் ஒரு உடல் கொண்டும் பின் பகுதியில் பசு ,நாய் வடிவில் நான்கு வேதங்களை கொண்டும் காட்சி தருவார். ஆனால் இங்கு சங்கு சக்கரம் கொண்ட நாராயணனை போல காட்சியளிக்கும் இந்த தத்த நாராயணரின் பின்புறம் தலைப்பகுதியில் சிவபெருமானை நினைவு படுத்தும் வகையில் சிவ ஜடை அமைந்திருப்பது சிறப்பு அம்சம் ஆகும் இந்த ரத்த நாராயணர் சிலையின்.
அடிப்பகுதியில் பிரம்மனுக்குரிய வாகனமாக அன்னம், சிவபெருமானின் வாகனமான நந்தி , மகாவிஷ்ணுவின் வாகனமான கருடன் ஆகியவை செதுக்கப்பட்டுள்ளன .தலைப்பகுதியில் உள்ள ஜடை முடி சிவபெருமானையும் தத்த நாராயணரின் நான்கு நான்கு கரங்களில் இரண்டு கரங்களில் உள்ள சங்கும் சக்கரமும் மகாவிஷ்ணுவையும், இரண்டு கரங்களை கீழ்நோக்கி மடியில் வைத்து தியானம் செய்த நிலையில் வைத்திருக்கும் கோலம் பிரம்மனையும் நினைவுறுத்துவதாக அமைந்திருக்கிறது.