சொத்துக்கள் பறிக்கப்பட்டன.. மகள் மதமற்ற கும்பலுக்கு இரையானாள் - பாகிஸ்தானில் இந்து குடும்பத்துக்கு அரங்கேறிய கொடூரம்!
சொத்துக்கள் பறிக்கப்பட்டன.. மகள் மதமற்ற கும்பலுக்கு இரையானாள் - பாகிஸ்தானில் இந்து குடும்பத்துக்கு அரங்கேறிய கொடூரம்!
பாகிஸ்தானில் இருந்து வந்த 56 இந்து யாத்ரீகர்கள் அடங்கிய குழுவின் உறுப்பினர்கள், பாகிஸ்தானில் இந்துக்கள் மீது அரங்கேற்றப்படும் துன்புறுத்தல் மற்றும் பயம் காரணமாக உத்தரகண்டிலிருந்து திரும்பிச் செல்ல விரும்பவில்லை. இந்திய அரசு தங்களது விசா வரம்பை ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த அறிக்கையின்படி, குழுவின் உறுப்பினர் ஒருவர் பேசுகையில், 'போதுமான பணத்தை கொண்டு வர பாகிஸ்தான் அதிகாரிகள் எங்களை அனுமதிக்கவில்லை' என்பதால் நாங்கள் திரும்பிச் செல்ல முடியாது. நாங்கள் பாகிஸ்தானில் 'இரக்கமற்ற துன்புறுத்தல்களை' எதிர்கொள்கிறோம். எல்லாவற்றையும் 'பறித்தனர்' என்று அவர் கூறினார்.
இந்தியாவுக்கு வருகை தரும் பாகிஸ்தான் இந்துக்களில் பலர் ஹரித்வார் பயணத்தை விரும்புகிறார்கள், இது அவர்களுக்கு மதிப்பிற்குரிய இடமாகும்.
அங்கு வந்த பெண் யாத்ரீகர்களில் ஒருவர் பேசுகையில்,
எங்கள் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மத மாற்றத்திற்காக மகள்கள் பறிக்கப்பட்டனர் மற்றும் சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அது அங்கு மரணத்தை விட மோசமானது. இந்திய அரசாங்கத்தின் புதிய சட்டத்தின் கீழ் எங்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து வருகை தரும் இந்துக்களை மீட்பதற்கு உள்ளூர்வாசிகள் உடைகள், பணம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை வழங்கியுள்ளனர்.
அறிக்கையின்படி, 'பாகிஸ்தானில் இருந்து வந்த மொத்தம் 200 இந்து அகதிகளை மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது, அவர்களுக்கு புதிதாக நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தவும் குடியுரிமைக்காகவும் காத்திருக்கிறோம் என்று இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் இந்துக்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானுக்குத் திரும்புவதற்கான அச்சமும், இஸ்லாமிய குடியரசில் தொடர்ந்த துன்புறுத்தல்களும் அவர்களை பாதித்துள்ளது.