Kathir News
Begin typing your search above and press return to search.

வம்பிழுத்த சீமானின் தம்பி! வச்சு செய்து அனுப்பிய ஊழியர்கள்!!

வம்பிழுத்த சீமானின் தம்பி! வச்சு செய்து அனுப்பிய ஊழியர்கள்!!

வம்பிழுத்த சீமானின் தம்பி! வச்சு செய்து அனுப்பிய ஊழியர்கள்!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Oct 2019 8:59 AM GMT


புதுக்கோட்டை அருகே கீரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் சென்ற நாம் தமிழர் கட்சி பிரமுகர் வினோத்குமார் என்பவர் அங்கிருந்த அனைவரையும் வட நாட்டவர் என நினைத்து தமிழனாகிய என்னிடமே வடநாட்டுக் காரனாகிய நீ கட்டணம் கேட்கிறாயா எனக் கேட்டு பிரம்புடன் தாக்கத் தொடங்கினார்.


அப்போது அங்கிருந்த 15 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி அலுவலர்கள் நாங்களும் தமிழன்தாண்டா எங்க கிட்டியே மோதறியா என்று சரமாரியாக அடித்து வெளுத்து வாங்கி விரட்டியடித்தனர். இதில் வினோத் குமார் பலத்த காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


வடநாட்டவர்கள் என தாக்கப்போய் உள்ளூர் தமிழர்களின் தாக்குதலுக்கு உள்ளான வினோத்குமார் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருச்சி மக்களவை தொகுதி வேட்பாளராக களம் கண்டவர் ஆவார். சீமான் கட்சியின் எம்.பி. பதவிக்காக களம் கண்ட வேட்பாளரே இந்த இலட்சணம் என்றால் சாதாரண வார்டு கவுன்சிலர் பதவிக்கு நிக்கறவன் எந்த தகுதியில இருப்பான்.. எல்லாம் தமிழ் நாட்டின் தலை எழுத்து என அதை பார்த்து பொது மக்கள் தலையில் அடித்துக் கொண்டார்களாம்.


.முதுகுத் தோல் பிய்ந்து பலத்த காயம் அடைந்த நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வினோத்குமார், இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் அவமானம் எனக் கருதி முதலில் புகார் அளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.


சுங்கச்சாவடி தரப்பில் புகார் அளித்ததால் வினோத்குமாரும் புகார் அளித்ததாகவும், இதன் பேரில் சுங்கச்சாவடி ஊழியர்கள் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News