Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடியை சீண்டிய அரவிந்த் கெஜ்ரிவால் - 25,000 அபராதத்துடன் பாடம் புகட்டிய நீதிமன்றம்?

பிரதமர் மோடியின் பட்டப்பிடிப்பு சான்றிதழை கேட்டு மேல்முறையீடு செய்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் அபராதம்.

பிரதமர் மோடியை சீண்டிய அரவிந்த் கெஜ்ரிவால் - 25,000 அபராதத்துடன் பாடம் புகட்டிய நீதிமன்றம்?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 April 2023 1:56 AM GMT

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பல்வேறு நபர்களும் தங்களுக்கு தெரிய வேண்டிய அரசு விபரங்களை முறைப்படி கேட்டு தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் பிரதமர் மோடி அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளிவந்து இருந்தது. இதில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதருக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் பிரதமர் மோடியின் பட்டமளிப்பு சான்றுகளை தனக்கு அளிக்க உத்தரவிடக்கோரி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அவர் ஏற்கனவே விண்ணப்பித்தார்.


அதனை ஏற்று பிரதமர் மோடியின் பட்டமைப்புச் சான்றிதழ் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அளிக்குமாறு குஜராத் பல்கலைக்கழகத்திற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிட்டு இருக்கிறது. ஆனால் குஜராத் பல்கலைக்கழகம் அந்த உத்தரவை எதிர்த்து, குஜராத் ஹை கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதன் பெயரில் மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு ஹை கோர்ட் இடைக்கால தடை விதித்தது. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் விசாரணை நடந்தது, அப்பொழுது பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வக்கீல் இது பற்றி கூறும் பொழுது, குழந்தைத்தனமான ஆர்வத்துடன் சான்றிதழ் கேட்கப்படுவது பொதுநலம் இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறும்பொழுது, யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்று வாதிட்டார். பிறகு தீர்ப்பு வழங்கிய நீதிபதி பட்டமளிப்பு சான்றிதழ் அளிக்குமாறு 7 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தார். பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நான்கு வாரங்களுக்குள் அவற்றை செலுத்துமாறு உத்தரவிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News