பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க ஆர்ப்பாட்டம் - விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க அரசை எதிர்த்து களமிறங்கிய பா.ஜ.க
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, வெல்லம், தேங்காய் வழங்க வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் பா.ஜ.க விவசாய அணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

By : Mohan Raj
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, வெல்லம், தேங்காய் வழங்க வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் பா.ஜ.க விவசாய அணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க விவசாய அணி மாவட்ட தலைவர் செந்தில் குமார் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம், மாநில செயற்குழு உறுப்பினர் தர்மலிங்கம், மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், மீசை அர்ஜுனன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகப்பில் செங்கரும்பு, வெல்லம், தேங்காய் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதுபோல் தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்திலும் நேற்று பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது இதன் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க மாவட்ட தலைவர் பாஸ்கர் பங்கேற்றார் தி.மு.க அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு, வெல்லம், தேங்காய் வாங்கியவை சேர்த்து வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
