Kathir News
Begin typing your search above and press return to search.

வெள்ளிக்கிழமை, தேவேந்திர ஃபத்னாவிஸ் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கிறார்.!

வெள்ளிக்கிழமை, தேவேந்திர ஃபத்னாவிஸ் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கிறார்.!

வெள்ளிக்கிழமை, தேவேந்திர ஃபத்னாவிஸ் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கிறார்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Oct 2019 9:50 AM GMT


மகாராஷ்டிராவில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக, சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வென்றுள்ளதால் ஆட்சியமைப்பதில், எந்த சிக்கலும் எழவில்லை. ஆனால், 5 ஆண்டுகால ஆட்சியில், தலா இரண்டரை ஆண்டுகளை பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்றும், இதனை எழுத்துப்பூர்வ உறுதிமொழியாக வழங்க வேண்டும் என்றும் சிவசேனா வலியுறுத்துகிறது.


இதுதொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்த, பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் பாஜக சார்பில் குழுவும் அமைக்கப்பட்டது.இந்தச் சூழலில், வருகிற வெள்ளிக்கிழமை, தேவேந்திர ஃபத்னாவிஸ் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க கூடும் என பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


ஒருவேளை அன்றைய நாளில், விழா நடைபெறாவிட்டால், சனிக்கிழமையன்று, பதவியேற்பு விழா நடைபெறும் என பாஜக வட்டார தகவல்கள் கூறியுள்ளன. அதன் பிறகு கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகீறது.


Translated Article From TIMES OF INDIA


Next Story
கதிர் தொகுப்பு
Trending News