Kathir News
Begin typing your search above and press return to search.

சபரிமலையில் பக்தர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் - பாதுகாப்பு கருதி அரசுக்கு கேரளா ஹை கோர்ட் உத்தரவு!

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் இந்த சிலையை கட்டுப்படுத்த வேண்டும் என கேரளா அரசுக்கு ஹை கோர்ட் உத்தரவிட்டது.

சபரிமலையில் பக்தர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் - பாதுகாப்பு கருதி அரசுக்கு கேரளா ஹை கோர்ட் உத்தரவு!

KarthigaBy : Karthiga

  |  14 Dec 2023 9:15 AM GMT

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால சீசனை ஒட்டி பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. பதினெட்டாம்படி வழியாக நிமிடத்திற்கு 70 முதல் 80 பக்தர்கள் வரை அய்யப்பனை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் .கூட்டம் அலைமோதி வருவதால் சபரிமலையில் கூட்டநெரிசல் ஏற்பட்டு பெண்கள் குழந்தைகள் உட்பட பக்தர்கள் பல சிரமங்களை அனுபவிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


குறிப்பாக 10 மணி நேரம் நீண்ட வரிசையில் நகர இடம் இன்றி காத்து நிற்பதுடன் உணவு கிடைக்காமல் தவிக்கிறார்கள். தேவஸ்தானம் சார்பில் சுக்குநீர், பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டாலும் பக்தர்களுக்கு பசி மயக்கத்தால் சோர்வாகி விடுகின்றனர். இதற்கிடையே நீலிமலை, அப்பாச்சிமேடு, மரக்கூட்டம் மற்றும் சரம் குத்தி போன்ற பகுதிகளில் கூட்டம் கூட்டமாக வரும் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு படிப்படியாக அனுப்பப்பட்டு வருவதால் பம்பையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.


மேலும் பார்க்கிங் குளறுபடி காரணமாக வெளியூர்களில் இருந்து சபரிமலைக்கு வரும் வாகனங்கள் பம்பைக்கு முன்பே வழியில் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் பக்தர்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக கேரளா ஹைகோர்ட் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்த அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-


சபரிமலை தரிசனத்திற்காக உடனடி முன்பதிவு மூலம் ஐந்தாயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம். அதற்கு மேல் வழங்கக்கூடாது. அதேபோல் நடைபாதையை காம்ப்ளக்ஸில் அதிக பக்தர்களை அடைக்காதீர்கள். 100 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 200 பேரை அடைத்து வைப்பதால் தான் கூட்ட நெரிசல் உட்பட்ட பிரச்சினை ஏற்படுகிறது.


குழந்தைகள் பெண்கள் முதியவர்களின் பாதுகாப்பு மிக முக்கியம். ஆதலால் சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும். வரிசையில் நீண்ட நேரம் பார்த்து நிற்கும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். பஸ்களில் அளவுக்கு அதிகமாக பக்தர்களை ஏற்றி பயணம் தொடரக்கூடாது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News