Kathir News
Begin typing your search above and press return to search.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக குவிந்து கொண்டிருக்கும் பரிசு பொருட்கள் - பக்திக்கு முன் பணம் பெரிதல்ல என நிரூபித்த பக்தர்கள்!

அயோத்தி ராமர் கோவிலுக்கு ஏராளமான பரிசுப் பொருட்களை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக குவிந்து கொண்டிருக்கும்  பரிசு பொருட்கள் - பக்திக்கு முன் பணம் பெரிதல்ல என நிரூபித்த பக்தர்கள்!

KarthigaBy : Karthiga

  |  11 Jan 2024 4:15 AM GMT

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டுஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளிநாடுகளில் இருந்தும் விலை மதிப்புள்ள பல்வேறு கலைப்பொருட்களை பக்தர்கள் அயோத்திக்கு அனுப்பி வருகிறார்கள். குறிப்பாக சீதாதேவி பிறந்த ஊராக கருதப்படும் நேபாளத்தில் உள்ள ஜனக்பூரில் இருந்து வெள்ளி காலனிகள், ஆபரணங்கள் மற்றும் ஆடைகள் உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசுகள் சுமார் 30 வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .


இதே போல் சீதை சிறை வைக்கப்பட்டதாக கூறப்படும் இலங்கையில் உள்ள அசோக வனத்தில் இருந்து பாறை ஒன்றை அந்த நாட்டு பிரதிநிதிகள் அயோத்தி கோவிலுக்கு பரிசாக வழங்கியுள்ளனர். இதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல அயோத்தி ராமர் கோவிலில் நிறுவுவதற்காக உத்தர பிரதேச மாநிலம் எட்டாம் மாவட்டம் ஜலேசரில் மிக பிரமாண்டமான மணி ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. எட்டு வகையிலான உலோகத்தால் செய்யப்பட்ட அந்த மணியின் எடை 2100 கிலோ ஆகும்.


இந்த மணியை தயார் செய்ய இரண்டு ஆண்டுகள் ஆனது. சமுதாய முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு அந்த மணி அயோத்திக்கு அனுப்பப்படுகிறது என்று அதனை தயாரித்த கைவினை கலைஞர் ஒருவர் கூறினார். இதே போல் லக்னோவை சேர்ந்த காய்கறி வியாபாரி அனில் குமார் சாகு 8 நாடுகளின் நேரத்தை ஒரே நேரத்தில் காட்டும் வகையிலான கடிகாரம் ஒன்றை தயாரித்துள்ளார்.75 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட கடிகாரத்தை கோவில் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய்க்கு பரிசாக அளித்ததாக அவர் தெரிவித்தார் .


சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் 5000 அமெரிக்க வைரங்கள் மற்றும் இரண்டு கிலோ வெள்ளியை கொண்டு ராமர் கோவிலின் கருப்பொருளில் நெக்லஸை உருவாக்கியுள்ளார். 40 கைவினைஞர்கள் 35 நாட்களில் செய்து முடித்த இந்த நகை ராம் மந்திர் அறக்கட்டளைக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. ராமர் மீது அசையாத பக்தியுடனும் தனது 'கர சேவக்' தந்தையின் கனவை நிறைவேற்றும் வகையிலும் ஹைதராபாத் சேர்ந்த 64 வயதான சல்லா சீனிவாச சாஸ்திரி தங்கமுலாம் பூசப்பட்ட காலணிகளை வழங்குவதற்காக கிட்டத்தட்ட 8,000 கிலோ மீட்டர் தூரம் நடந்து அயோத்தியை அடைந்தார்.


வதோதராவை சேர்ந்த அரவிந்த் பாய் மங்கள் பாய் பட்டேல் என்ற விவசாயி 1100 கிலோ எடையுள்ள ராட்சத விளக்கை வடிவமைத்துள்ளார். பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட இந்த விளக்கு 9.25 அடி உயரமும் 8 அடி அங்குலமும் கொண்டது .இதுபோல் பல்வேறு தரப்பினரும் அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசு பொருட்களை அனுப்பிய வண்ணம் உள்ளனர். சிறு சிறு பரிசு பொருள்கள் முதல் பெரிய அளவிலான பரிசுப் பொருட்கள் நன்கொடைகள் வரை ராமர் கோவிலுக்கு குவிந்த வண்ணம் இருப்பது மக்கள் ராமர் மீது கொண்டிருக்கும் அளவு கடந்த பக்தியையும் அன்பினையும் காட்டுகிறது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News