Kathir News
Begin typing your search above and press return to search.

தனுஷ்கோடி ராமேஸ்வரம் ரயில் பாதை விரைவில் செயல்படும் - வெளிவந்த சூப்பர் தகவல்!

தனுஷ்கோடி - ராமேஸ்வரம் ரயில் பாதை விரைவில் மக்களுக்காக அர்ப்பணிக்கப்படும் என்று பா.ஜ.க தகவல் தெரிவித்துள்ளது.

தனுஷ்கோடி ராமேஸ்வரம் ரயில் பாதை விரைவில் செயல்படும் - வெளிவந்த சூப்பர் தகவல்!

KarthigaBy : Karthiga

  |  8 July 2023 5:45 AM GMT

தமிழக பா.ஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2006 - 2007 இல் ராமேஸ்வரம் தனுஷ்கோடி ரயில் திட்டம் தொடங்குவதற்கு ரூபாய் 1100 கோடி நிதி தேவை என அறிவிக்கப்பட்டது என்றும் 2023- 2024 ஆம் ஆண்டில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது என்றும் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார். 2006-2007 இல் இதுபோன்ற ஒரு திட்டத்தை அறிவிக்காததுடன் நிதியும் ஒதுக்கப்படவில்லை.


நாடாளுமன்றத்தில் 2011ல் காங்கிரஸ் எம்.பி ராமசுப்பு இது தொடர்பான கேள்வியை எழுப்பிய போது அதற்கு மதிய மந்திரி முனியப்பா அது குறித்து அறிக்கை பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே ஆய்வே முடியாத நிலையில் ரூபாய் 16,400 கோடி ஒதுக்கியது எப்படி? என்ற மர்ம ரகசியத்தை கே.எஸ் அழகிரி விளக்க வேண்டும்.


நல்ல வேலை காங்கிரஸ் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. இல்லையெனில் ரூபாய் பத்தாயிரம் கோடிக்கும் அதிகமான ஊழல் நடைபெற்றிருக்கும். 720 - 800 கோடி ரூபாய் செலவில் தனுஷ்கோடி ராமேஸ்வரம் ரயில் பாதை விரைவில் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE:DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News