Kathir News
Begin typing your search above and press return to search.

டிஜிட்டல் இந்தியாவில் ஒன்றிணைந்த கிராம மக்கள்: மத்திய இணை அமைச்சர் தகவல்!

நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் அதிகமான இணைய வழி பயன்பாட்டு அதிகரித்திருப்பதாக மத்திய இணை அமைச்சர் குறிப்பிட்டு இருக்கிறார்.

டிஜிட்டல் இந்தியாவில் ஒன்றிணைந்த கிராம மக்கள்: மத்திய இணை அமைச்சர் தகவல்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  15 Dec 2022 5:33 AM GMT

சுமார் 800 மில்லியன் மக்கள் தற்பொழுது பிராட் பேண்ட் பயனாளராக இணைந்து உலகின் மிகப்பெரிய நாடாக இந்தியாவை உயர்த்தியிருக்கிறார்கள் என்று மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்தியாவிற்கு ஆதரவளிப்பதற்கு தொழில்நுட்ப யுகத்தின் பயன்பாடு என்ற கருப்பொருளில் நடைபெற்ற கருத்தரங்கில் இவர் உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறுகையில், பாரத் நெட் திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் அதாவது கிராம பகுதிகளில் அதிக அளவில் பிராட் பேண்ட் இணைப்புகள் மற்றும் ஐந்தாம் தலைமுறை இணைப்புகள் முதலியவை 1.2 மில்லியன் இந்திய பயனாளர்களுக்கு உருவாக்கியதுடன் சர்வதேச இணைய உலகில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.


மேம்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை கொள்கைகளும் தொழில்நுட்ப புதிய கண்டுபிடிப்புகளும் விரைவில் கொண்டுவரப்பட்ட இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் சர்மா மற்றும் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் ஆளுகையில் மாதிரிகளின் தங்கள் நாடுகளின் மாற்ற விரும்பும் சர்வதேச நாடுகளுக்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாகவும் பிரதமர் ஜி-20 தலைமையின் போது அறிவித்திருந்ததை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.


குறிப்பாக இணைய வளர்வதையும், புதிய கண்டுபிடிப்புகள் வளர்ச்சி பெறுவதையும் உறுதி செய்யும், அதே வேளையில் இந்தியாவின் அனைத்து டிஜிட்டல் பயனாளிகளுக்கும் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் டிஜிட்டல் அளவில் பாதுகாப்பு நிச்சயம் வழங்கப்படும். அவற்றை வழங்குவதற்கு மத்திய அரசு உறுதிப்பூண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

Input & Image courtesy: Hindu News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News