எங்க! இனி பெட்ரோல் பங்கில் ஏமாத்த சொல்லுங்க பார்க்கலாம் - முறைகேடுகளுக்கு கிடுக்குபிடி போடும் அடுத்த அதிரடி திட்டம் - மோசடிகளை ஓட ஓட விரட்டியடிக்கும் மோடி சர்கார்!
எங்க! இனி பெட்ரோல் பங்கில் ஏமாத்த சொல்லுங்க பார்க்கலாம் - முறைகேடுகளுக்கு கிடுக்குபிடி போடும் அடுத்த அதிரடி திட்டம் - மோசடிகளை ஓட ஓட விரட்டியடிக்கும் மோடி சர்கார்!
By : Kathir Webdesk
பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் (பிபிசிஎல்) எரிபொருள் விற்பனை நிலையங்களில் நவீன டிஜிட்டல் முறையில் எரிபொருள் நிரப்பும் செயல்பாடு தொடங்கப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையை வளர்ப்பது என்ற நோக்கத்துடன், நவீன தொழில்நுட்பம் கொண்ட டிஜிட்டல் முன்முயற்சிகளைப் பயன்படுத்தி, எரிபொருள் நிரப்பும் முறை தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நவீன முறையின் மூலம் டேங்கர்கள் வழியாக பிபிசிஎல் எரிபொருள் நிலையங்களுக்குத் தரமான, சரியான அளவில் எரிபொருள் விநியோகிப்பது 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த டேங்கர்களில் குறிப்பிட்ட எரிபொருள் நிலையத்திற்கு சென்று எரிபொருளை வெளியேற்றும்போது மட்டுமே எலக்ட்ரானிக் பூட்டு திறக்கும் வகையில் நவீன ஜியோபென்சிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வளவு எரிபொருள் வழங்கப்பட்டதோ அதற்கு மட்டும் தாமாகவே ரசீது உருவாக்கப்பட்டு, பணம் செலுத்துவதற்கான டிஜிட்டல் முறை ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால், 100 சதவீத பாதுகாப்பு கிடைத்துள்ளது.
ஒவ்வொரு முறை எரிபொருள் இறக்கப்படும் போதும், பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தாமாகவே எஸ்எம்எஸ் அனுப்புதல் போன்ற வசதிகள் இதில் செய்யப்பட்டுள்ளன. பிபிசிஎல் நிறுவனம் தற்போது சான்றளிக்கப்பட்ட 8600 சில்லரை விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது.
முதற்கட்டமாக சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் புதிய முன்முயற்சி தில்லி, கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இரண்டாம் கட்ட செயல்பாடுகள் அடுத்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள 42 ஏ மற்றும் சி பிரிவு நகரங்களில் தொடங்கப்படும் என்று பிபிசிஎல் நிறுவன செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.