Kathir News
Begin typing your search above and press return to search.

கொழும்புக்கு போகாமலேயே நம்ம யாழ்பாணத்துக்கு இனி நாம போகலாம், வரலாம் !! சென்னை – யாழ்பாணம் நேரடி விமான சர்வீஸ் தொடங்கியது!!

கொழும்புக்கு போகாமலேயே நம்ம யாழ்பாணத்துக்கு இனி நாம போகலாம், வரலாம் !! சென்னை – யாழ்பாணம் நேரடி விமான சர்வீஸ் தொடங்கியது!!

கொழும்புக்கு போகாமலேயே நம்ம யாழ்பாணத்துக்கு இனி நாம போகலாம், வரலாம் !! சென்னை – யாழ்பாணம் நேரடி விமான சர்வீஸ் தொடங்கியது!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Oct 2019 12:36 PM IST



தமிழகம் உட்பட இந்தியாவில் வாழும் ஈழப் பகுதிகளை சேர்ந்த தமிழர்கள், இந்திய தமிழர்கள் ஆகியோருக்கு இனிக்கும் செய்தியாக சென்னையிலிருந்து யாழ்பாணம் பலாலி விமான நிலையத்துக்கு நேரடி விமான சர்வீஸ் தொடங்கப்பட்டுள்ளது. பலாலி விமான தளம் தற்போது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


நேற்று சென்னையில் இருந்து ஏர் இந்தியாவின் அலைன்சர் விமானம், யாழ்ப்பாணம் கிளம்பிச் சென்றது. அடுத்த கட்டமாக , மதுரை, கோவை, திருச்சி, சென்னை, மும்பை, திருவனந்தபுரம் நகரங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளது. இலங்கையில் ஈழப்பகுதிகளில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தினால் 36 ஆண்டுகளுக்கு முன்பு யாழ்பாணம் விமான சர்வீஸ் நிறுத்தப்பட்டது. இதனால் கொழும்பு சென்றே அங்கிருந்து தரை மார்க்கம் மூலம் நூற்றுக்கணக்கான மைல்கள் பயணித்து யாழ்பாணம் செல்ல நேர்ந்தது.


தற்போது இலங்கை அரசு இந்திய அரசுடன் சேர்ந்து எடுத்து வரும் முயற்சிகள் மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளை அடுத்து தமிழர் பகுதிகளில் சுமூக சூழ்நிலைகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் மூலம் இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்லாமல் நம்ம ஊரு தமிழர்களும் ஆன்மீக ஸ்தலங்களை சுற்றிப் பார்க்கவும், யாழ்ப்பாண தீபகற்ப பகுதிகளை கண்டு ரசிக்கவும், தமிழ் உறவுகளைக் காணவும் சென்று வரலாம். அதேபோல நம் ஈழப்பகுதி மற்றும் திருகோணமலை வட்டாரத் தமிழர்களும் கல்வி, வேலை வாய்ப்புகளுக்காக தமிழகம் வந்து செல்ல மிக எளிதான சூழ் நிலை உருவாகியுள்ளது. Â



source: dinamalar.com


Next Story
கதிர் தொகுப்பு
Trending News