அடுக்குமாடி கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்தை தவிர்க்க தேசிய மின் ஆய்வு ஆணையம் பிறப்பித்த உத்தரவு

By : Karthiga
அடுக்குமாடி கட்டிடங்களில் எளிதாக மின்சாரம் கணக்கெடுப்பதற்காக மின்சார மீட்டர்கள், மெயின் சுவிட்ச் பாக்ஸ் போன்றவை ஒட்டுமொத்தமாக தரை தளம் அல்லது அடித்தளத்தில் ஒரே இடத்தில் அமைப்பது வழக்கம். புதிதாக கட்டிடங்களில் தளங்களை அதிகரித்தாலோ அல்லது வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மின்சார இணைப்பு எண்ணிக்கை அதிகரிக்கும். ஒவ்வொரு தளத்திலும் உள்ள அடுக்குமாடி வீடுகளுக்கு தனித்தனியாக மின்சார இணைப்பை பிளாட்டின் உரிமையாளர் அல்லது கட்டிடத்தின் உரிமையாளர் தன் பெயரில் பெற்றிருப்பார்.
ஒரே இடத்தில் 50 முதல் 100 மின்சார இணைப்புகளுக்கான மீட்டர்கள் மெயின் சுவிட்ச் பாக்ஸ்கள் அமைக்கப்படுகிறது. இதனால் பல்வேறு பிரச்சனைகள் கட்டிடங்களில் ஏற்படுகின்றன. சில நேரங்களில் அடுக்குமாடி கட்டிடங்களில் பெரிய அளவில் தீ விபத்து கூட ஏற்படுகின்றன. அண்மையில் மும்பையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு கட்டிடத்தின் அடித்தளத்தில் ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மின்சாரம் மீட்டார்கள் மற்றும் மெயின் சுவிட்ச் பாக்ஸ்களை அமைத்ததே காரணம் என்று புகார் எழுந்தது. இதை எடுத்து தேசிய மின் ஆய்வு ஆணையம் 49 அடி அதாவது 5 மாடுகள் அதற்கு மேற்பட்ட கட்டிடங்களில் ஒரே இடத்தில் மெயின் சுவிட்ச் பாக்ஸ்களை அமைக்க கூடாது என்றும் ஒவ்வொரு தளத்திலும் அந்தந்த தளத்திற்கான மின்சார மீட்டர்கள் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.ஆய்வு ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது :-
அடுக்குமாடி கட்டிடங்களில் ஒவ்வொரு மாடியிலும் பஸ்பார் டிரங்கிங் என்ற முறையில் மெயின் ஸ்விட்ச் பாக்ஸ் மற்றும் மீட்டர்களை அமைக்க வேண்டும். அதிக உயரமுடியை அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டுவோர் இந்த புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும். பொது கட்டிட விதிகளின்படி தமிழகத்தில் 60 அடி உயரம் அதாவது ஆறு மாடிக்கு மேற்பட்டவையே அடுக்கு மாடி கட்டிடங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால் தேசிய கட்டிட விதிகளின்படி அடுக்குமாடி கட்டிடங்களுக்கு புதிதாக திட்ட அனுமதி பெற விண்ணப்பிக்கும் போது 49 அடிக்கு மேல் ஐந்து மாடிக்கு மேற்பட்ட கட்டிடங்களை அடுக்குமாடிகளாக வகைப்படுத்தப்படுகிறது .
ஆகவே 49 அடிக்கு மேற்பட்ட உயரம் உள்ள கட்டிடங்களில் தள வாரியாக பஸ்பார் ட்ரிங்கிங் முறையில் மின்சாரம் மீட்டர் மெயின் பாக்ஸ் அமைக்க வேண்டும். இதில் ஏற்கனவே திட்ட அனுமதி பெற்ற கட்டிடங்களை மட்டும் விடுத்து புதிய கட்டிடங்களில் இந்த விதி அமலாக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SOURCE :DAILY THANTHI
