Kathir News
Begin typing your search above and press return to search.

பேரிடர் அபாயங்களை செல்போன் மூலம் உஷார் படுத்தும் திட்டம்

பேரிடர் அபாயங்களை செல்போன் மூலம் உஷார்ப்படுத்தும் திட்டத்தை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் செயல்படுத்த உள்ளது.

பேரிடர் அபாயங்களை செல்போன் மூலம் உஷார் படுத்தும் திட்டம்

KarthigaBy : Karthiga

  |  26 July 2023 9:15 AM GMT

கடந்த காலங்களில் புயல், மழை, வெள்ள அபாய எச்சரிக்கைகள் தண்டோர மூலமமும் பத்திரிகை, வானொலி அறிவிப்புகள் மூலம் தெரிவிக்கப்பட்டு இருந்தன.தொலைக்காட்சி வரவை தொடர்ந்து இது போன்ற அறிவிப்புகள் தொலைக்காட்சி மூலமும் வெளிப்படுத்தப்பட்டன. இருந்த போதிலும் இந்த அறிவிப்புகள் பேரிடர் பாதிப்புக்கு முன்னதாக சம்பந்தப்பட்டவர்களை சென்றடைவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன.


இதன் காரணமாக முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும் பேரிடரால் ஏற்படும் உயிர்ச்சேதம் போன்றவை தவிர்க்க முடியாததாகி வந்தது. தற்போது விரல் நிலையில் வானிலை நிலவரங்கள் அறிந்து கொள்ளும் வகையில் தொழில்நுட்பம் வந்தபோதிலும் ஒரே நாள் இரவில் யாரும் எதிர்பாராத வகையில் கனமழை பெய்து பெரு வெள்ளம் ஏற்படும் போது விடிந்த பின்பு வீட்டை விட்டு வெளியே வரும்போது தான் அதை நாம் அறிந்து கொள்ளும் நிலையும் உள்ளது.


திடீரென உருவாகும் புயல், கனமழை பூகம்பத்துக்கான அறிகுறி போன்ற எச்சரிக்கை அறிவிப்புகளை இவை ஏற்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு சில நொடிகளில் செல்போன் அலாரம் மூலம் தெரிவிக்கும் வகையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ரூபாய் 354 கோடி செலவில் புதிய திட்டத்தை உருவாக்கி வருகிறது. அதாவது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பேரிடர் ஏற்பட போவதாக கருதப்படும் இடங்களில் உள்ள செல்போன்களை கண்டறிந்து அந்த செல்போன்களுக்கு எச்சரிக்கையாளர் மொழிக்கு வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.


இதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் முன்கூட்டியே மேற்கொள்ள இயலும். இந்த திட்டத்தின் முதல் கட்ட பணிக்காக ரூபாய் 354 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஒருவேளை சம்பந்தப்பட்ட நபரின் செல்போன் 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் எச்சரிக்கைை அலாரம் ஒலிக்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் செயல்பாட்டுக்கு வரும்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News