நியூயார்க்கின் 2 லட்சம் இந்துக்களை கவுரவிக்கும் அறிவிப்பு - இனி தீபாவளிக்கு விடுமுறை
நியூயார்க்கில் வாழும் 2 லட்சம் இந்துக்களை கவுரவிக்கும் விதமாக தீபாவளி தினத்தன்று விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
By : Bharathi Latha
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரங்களில் பல்வேறு இந்திய குடும்பங்கள் வசித்து வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்கள் இந்தியா வம்சவளியை சேர்ந்த நபர்கள் பல்வேறு தரப்பில் சுமார் 2 லட்சம் இந்து குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றார்கள். ஆனால் இந்நாள் வரை தீபாவளி அன்று அங்கு விடுமுறை கிடையாது. அன்று இந்துக்களுடைய பண்டிகைகளுக்கு விடுமுறை இல்லாத வேலை செய்து வந்தார்கள். ஆனால் தற்போது அந்த இரண்டு லட்சம் இந்துக்களை கௌரவப்படுத்தும் விதமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இனி 2023 ஆம் ஆண்டு முதல் நியூயார்க் நகரங்களில் தீபாவளி அன்று விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பு அங்கு உள்ள இந்தியர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது. தீபாவளி திருநாள் அன்று அவர்கள் அங்கிருந்து நம்முடைய பண்டிகைகளை கொண்டாடுவதற்கு வாய்ப்பாகவும், இது பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் வெளிநாடுகளில் இந்து பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது கிடையாது.
ஆனால் முதல் முயற்சியாக தற்போது தீபாவளி திருநாள் அன்று அடுத்த வருடம் முதல் அவர்களுக்கு விடுமுறை நாளாக அமைய இருப்பது அனைவரிடம் தரப்பில் பாராட்டை பெற்றுள்ளது. நியூயார்க் நகரில் வாழும் அனைத்து இந்துக்களுக்கும் இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கும். அதுபோல நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகளிலும் தீபாவளி தினத்தன்று விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Input & Image courtesy: News