சார்பதிவாளரை கூட்டணி அமைத்து தாக்கிய தி.மு.க மற்றும் வி.சி.க நிர்வாகிகள்
திண்டுக்கல் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளரை கூட்டணி அமைத்து தாக்கிய வி.சி.க மற்றும் தி.மு.க நிர்வாகிகள்.
By : Mohan Raj
திண்டுக்கல் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளரை கூட்டணி அமைத்து தாக்கிய வி.சி.க மற்றும் தி.மு.க நிர்வாகிகள்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பத்திரப்பதிவு அலுவலக சார்பதிவாளர் முகமது அப்துல் காதரை தாக்கிய எஸ்.குறும்பட்டியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் திருமாமணியை போலீசார் கைது செய்துள்ளனர் தி.மு.க ஊராட்சி செயலர் இந்திரேசனை தேடி வருகின்றனர்.
சார் பதிவாளர் முகமது அப்துல் காதர் அலுவலகத்தில் இருந்தபோது பத்திரப்பதிவுக்கு சாட்சி கையெழுத்திட இந்திரேசன், திருமாமணி சென்றனர் அப்பொழுது அங்கு அலைபேசியில் படம் எடுத்தனர். அதனை கூடாது என்ற சர்ப்பதிவாளர் முஹம்மது அப்துல் காதரை இருவரும் கீழே தள்ளித் தாக்குதல் நடத்தினர். மேலும் ஜாதியை சொல்லி தரக்குறைவாக பேசியதாக புகார் தந்துவிடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர். சார்பதிவாளரே அலுவலகத்தில் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.