Kathir News
Begin typing your search above and press return to search.

ஏ.பி.வி.பி மீது அவதூறு பரப்ப சதி - பின்னணியில் தி.மு.க.? #ABVP #DMK #UdhayanithiStalin #Kanimozli

ஏ.பி.வி.பி மீது அவதூறு பரப்ப சதி - பின்னணியில் தி.மு.க.? #ABVP #DMK #UdhayanithiStalin #Kanimozli

ஏ.பி.வி.பி மீது அவதூறு பரப்ப சதி - பின்னணியில் தி.மு.க.? #ABVP #DMK #UdhayanithiStalin #Kanimozli

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 July 2020 11:07 AM GMT

ஏ.பி.வி.பி இந்த அமைப்பானது 71 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் வலதுசாரி அமைப்பு. மாணவர்கள் மத்தியில் நக்சல் சிந்தனைகளை, மாணவர்கள் அவர்களின் படிப்பு மற்றும் குடும்ப அமைப்பு போன்றவற்றில் இருந்து விடுபட்டு தனியே தீவிரவாத எண்ணங்களை அவர்களுக்குள் விதைக்கும் தீய சக்திகள் மாணவர்களை அண்டவிடாதவாறு நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு RSS'ன் அங்கமாகும்.

தற்பொழுது இந்த அமைப்பின் வளர்ச்சியை தடைசெய்யவும், இதன் நற்பெயரை கெடுக்கும் நோக்குடனும் சில செயல்கள் நடந்தேறி வருகின்றன. இந்திய அளவில் இதன் பிண்ணனியில் காங்கிரஸ்'ம் தமிழக அளவில் தி.மு.க'வும் செயல்படுவது அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது.

சமீபத்தியமாக தி.மு.க'வின் மீதுள்ள மக்களின் பார்வையானது மிகவும் மாறியுள்ளது. முற்றிலும் இந்து மத எதிர்ப்பு, கழக தொண்டர்களால் பொதுமக்கள் மீது ஏவப்படும் ரவுடியிசம் மற்றும் திருட்டு புகார்கள்,இவ்வளவு ஏன் உடன்பிறப்புகள் மத்தியிலும் கூட கடுமையான அதிருப்தி வாரிசுகளுக்கு மட்டும் பதவிகளை குடுத்துவிட்டு தொண்டர்களுக்கு வெறும் அறிக்கை துண்டுகளை கொடுத்ததால் தொண்டர்கள் மத்தியிலேயே மதிப்பிழந்த தலைமை, பி.கே வருகைக்கு பிறகு கட்சி சீனியர்களை பந்தாடுவதால் கட்சி சீனியர்களே கடுப்பில் திரிவது என ஏகபோகத்திற்கும் அதலபாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது தி.மு.க. குறிப்பாக இந்து மத மக்களின் ஒற்றுமையால் ஏற்பட்ட கறுப்பர் கூட்டம் எதிர்ப்பு இதற்கு அகசிறந்த உதாரணம் இதன் பின்னணியில் தி.மு.க என்பதை அதன் தலைவர்கள் மறைத்தாலும் தமிழகத்தின் கடைகோடியில் இருக்கும் இந்து'விற்க்கு கூட தெரிந்துவிட்டது தி.மு.க'வின் தூண்டுதலால்தான் கறுப்பர் கூட்டம் கிட்டதட்ட 500 வீடியோக்கள் மேல் இந்துமதத்தை விமர்சித்து பதிவிட காரணம் என்பது.

இந்த நிலையில் மற்றவர்களின் மேல் பழியை சுமத்தி தன் மேல் உள்ள பழியை தி.மு.க மறைக்க முயல்கிறது. அந்த வகையில்தான் ஏ.பி.வி.பி'ன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலையை துவங்கியுள்ளது. ஏ.பி.வி.பி'யின் தலைவர் சுப்பையா சண்முகம் அவர்கள் குடியிருக்கும் வீட்டுப்பகுதியில் நடந்த ஒரு பிரச்சினையை வைத்து அவப்பெயர் ஏற்படுத்தி அரசியல் செய்ய தி.மு.க ஆரமித்துவிட்டது. இவ்வளவிற்க்கும் அந்த பிரச்சினை அங்கிருக்கும் குடியிருப்பு சங்கத்தின் மூலமாக தீர்க்கப்பட்டதை அங்கே இருக்கும் அனைவரும் ஒத்துக்கொண்டுள்ளனர். ஆனால் தி.மு.க மட்டும் வழக்கம் போல் அதனுடைய அக்மார்க் நாடகமான "அய்யய்யோ அம்மம்மா" அலறலை இந்த ஏ.பி.வி.பி மேல் அவதூறு பரப்ப உபயோகபடுத்தியிருக்கிறது.

இதனை வழக்கமான தி.மு.க'வின் பட்டத்து இளவரசர் உதயிநிதி'யும், கனிமொழி'யும் அவர்களது ட்விட்டர் கணக்கில் வழக்கமான டெம்ப்ளேட் வசனத்தில் பதிவிட்டிருக்கின்றனர். அதனை தி.மு.க'வின் அடிவருடி ஊடக நண்பர்களும் பொய் செய்தி கிடைத்துவிட்டது தி.மு.க'வின் கூடுதல் ஊதியம் நிச்சயம் என மகிழ்ச்சியுடன் அவதூறு பரப்ப ஆரமித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News