Kathir News
Begin typing your search above and press return to search.

தக்காளி வாங்க மக்கள் திண்டாட, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்காக கோடிகளை கொட்டி வாங்கப்பட்ட இரண்டு ஆடம்பர சொகுசுக் கார்கள்!

தக்காளி வாங்க மக்கள் திண்டாட, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்காக கோடிகளை கொட்டி வாங்கப்பட்ட இரண்டு ஆடம்பர சொகுசுக் கார்கள்!
X

DhivakarBy : Dhivakar

  |  25 Nov 2021 9:12 AM IST

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆடம்பர கார்கள் வரிசையில், ரூபாய் கோடிக்கும் மேல் மதிப்பிலுள்ள இரண்டு புதிய ஆடம்பர லேண்ட் ரோவர் டிபென்டர்(Land Rover Defender) எஸ்.யூ.வி கார்கள் இணைந்துள்ளதாக GQ India ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தக்காளி விலை தமிழக மக்களை கதிகலங்க வைக்க, ஆன்லைன் தேர்வு நடத்த மாணவர்கள் போராட்டக்கொடி ஏந்தி நிற்க, மழை வெள்ளத்தால் சென்னை மற்றும் பிற பகுதிகள் தத்தளித்து வர, தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் இரண்டு மிக ஆடம்பர சொகுசு எஸ்.யூ.வி கார்களை வாங்கிய தகவல், தமிழக அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.


சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் அதிகாரப்பூர்வ "வாஹன்" இணையதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தும் 2 லேண்ட் ரோவர் டிபென்டர் எஸ்.யூ.விகள் கடந்த ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு பிரம்மாண்ட ஆடம்பர கார்களும் தலா ஒரு கோடியே 12 லட்ச ரூபாய் ஆகும். ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குள்ளேயே இரண்டு ஆடம்பர விலை உயர்ந்த கார்களை தனது காண்வாயில் சேர்த்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக தி.மு.க ஆதரவாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆடம்பர சொகுசு கார்களில் உலா வருவது பொதுமக்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News