Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்தை நியாயப்படுத்துகிறதா தி.மு.க ?

இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்தை நியாயப்படுத்துகிறதா தி.மு.க ?

இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்தை நியாயப்படுத்துகிறதா  தி.மு.க ?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Aug 2019 6:07 PM IST


ரிபப்ளிக் டிவியில் அர்னாப் கோஸ்வாமி நெறியாளராக இருந்து நடத்திய விவாதத்தில் திமுக பிரதிநிதியாக சரவணன் பங்கேற்றார். அரசியல்சாசனத்தின் பிரிவு 370-வது பிரிவு நீக்கப்பட்டது குறித்து திமுகவின் எதிர்ப்பை தெரிவித்த சரவணன், ”காஷ்மீர் மீது இந்தியாவுக்கு எந்தஉரிமையும் கிடையாது; ஏனென்றால், அது என்றைக்குமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது இல்லை” என்றார்.



இதை கேட்டதும் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கட்சி பாகுபாடு இன்றி கண்டித்தனர்.






அர்னாபும் தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தி, “சரவணன், நீங்கள் சொல்வதுதான் திமுகவின் அதிகாரபூர்வ நிலை என்று கட்சி தலைவர் ஸ்டாலின்அறிவிப்பாரா? காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்றால், அது இந்தியஇறையாண்மைக்கு எதிரானதாகும். அதன் விளைவாக திமுக இந்தியாவில் எங்கும் செயல்பட முடியாது.” என்று குறிப்பிட்டார்.




https://twitter.com/mayavarathaan/status/1161808925961773057


அர்னாப் கேள்விக்கு பதில் சொல்லாமல், சரவணன் அந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே வெளிநடப்பு செய்தார்.



திமுகவின் அதிகார செய்தி தொடர்பாளர் சரவணன் இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து தெரிவித்து நாட்கள் பல கடந்தும் இதுவரை இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாய் திறக்கவே இல்லை. அதற்கு மறுப்பு தெரிவிக்கவும் ஸ்டாலின் முன்வரவில்லை.


இந்த நிலையில், சரவணன் கருத்துதான், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வரலாற்று நிகழ்வை குறிக்கும் விதமாகத்தான் 'Kashmir was never an integral part of India' என்று சொன்னேன்” என்று சரவணன் குறிப்பிட்டு உள்ளார்.


அதாவது, இந்திய இறையாண்மைக்கு எதிராக திமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் சரவணன், ரிபப்பிளிக் டிவியல் கடந்த 12.08.2019அன்று கூறியதை மீண்டும் நியாயப்படுத்தி உள்ளது போல் தெரிகிறது.


எனவே, இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து தெரிவித்த திமுக செய்தி தொடர்பாளர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வாய்பு உள்ளதாக கூறப்படுகிறது.


இருப்பினும் இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து தெரிவித்த திமுக மன்னிப்பு கேட்கவில்லை. இதனால், சரவணனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பதே தேச பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News