வரலெஷ்மி நோன்பு ன்னா அலர்ஜி, பக்ரீத் ன்னா ஆஹா - தி.மு.க பத்திரிக்கை தினகரனின் அடடே சமூக நீதி.! #DMK #DinakaranNews
வரலெஷ்மி நோன்பு ன்னா அலர்ஜி, பக்ரீத் ன்னா ஆஹா - தி.மு.க பத்திரிக்கை தினகரனின் அடடே சமூக நீதி.! #DMK #DinakaranNews

தி.மு.க'வும் அதன் ஆதரவு ஊடகங்களும் என்னதான் இருந்தாலும் இந்து சமுதாய மக்களை தொல்லை தரும் இனமாகவும், புவியில் வாழ தகுதி இல்லாதவர்களாகவும், இந்து சமுதாய மக்கள் தான் இங்கு நிலவும் அனைத்து பிரபஞ்ச பிரச்சினைகளுக்கு காரணம் என்பது போலவும் சித்தரிக்க முயல்வது இன்னும் குறையவில்லை.
ஆனால் இந்து மத மக்கள் தங்கள் செய்கின்ற அதே செயலை மத்த மதங்களை சார்ந்தவர்கள் செய்யும் பொழுது தி.மு.க'வும் அதன் ஊடகங்களும் காட்டும் அக்கறை இருக்கே அப்பப்ப்பா வளரும் கை குழந்தையை தாய் சுமப்பது போல "பார்த்து ராஜா! வலிக்குதா செல்லம்!! ஏன்டா கண்ணு!!!" என்பது போல் தொட்டிலில் போட்டு ஆட்டாத குறையாக அவர்களை பொத்தி பொத்தி வளர்ப்பார்கள்.அந்த வகையில் இன்றைய தி.மு.க'வின் ஊடக அறம் கூறும் விஷயம்.
இந்து மக்களின் பண்டிகையை "வரலெஷ்மி நோன்பை முன்னிட்டு சேலம் கடைகளில் கூட்டம் சேர்ந்ததாகவும்,அதானல் தொற்று ஏற்படும் அபாயம்" எனவும் ஆலையில் சங்கு ஊதியதை போல் அலறிய தி.மு.க தினகரன் பத்திரிக்கை.
அதே பக்ரீத் பண்டிகையை குறிப்பிட்டு செய்தி வெளியிடும் பொழுது "பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடு வாங்க இஸ்லாமியர்கள் ஆர்வம், விற்பனை அமோகம்" என இஸ்லாமியர்களின் செய்தியை மட்டும் புல்லாங்குழல் ஊதி தூங்க வைப்பது போல் மென்மையாக சொல்வது எந்த வகையான சமூக நீதி என தி.மு.க கூறுமா?
அப்போ இந்துக்கள் சேர்ந்தா கூட்டம்? கொரோனோ தொற்று பரவும்? இஸ்லாமியர்கள் சேர்ந்தா விற்பனை அமோகம்!!! அப்ப வியாதி பரவாது அப்படித்தானே திராவிட முன்னேற்ற கழகமே???