Kathir News
Begin typing your search above and press return to search.

"இங்கெல்லாம் தங்கக் கூடாது" கோவிலில் உறங்கிய இருளர் மக்களை "கொளுத்தி விடுவேன்" என்று மிரட்டிய திமுக பிரமுகர் !

இங்கெல்லாம் தங்கக் கூடாது கோவிலில் உறங்கிய இருளர் மக்களை கொளுத்தி விடுவேன் என்று மிரட்டிய திமுக பிரமுகர் !

ShivaBy : Shiva

  |  30 Nov 2021 6:31 AM GMT

திமுகவின் சமூக நீதிக் கொள்கை வெறும் வாய்ச்சவடால் மட்டுமே என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. கடும் மழையில் தங்க இடமில்லாமல் கோவிலில் இரவைக் கழித்த இருளர் பழங்குடியின மக்களை திமுக பிரமுகர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இருளர் மக்கள் படும் துன்பங்களை காட்சிப்படுத்தும் விதமாக நடிகர் சூர்யா நடித்த ஜெய் பீம் என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் பல உண்மைகள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டு சில சமூகத்தினர் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்த முயன்றதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. திரைப்படத்தின் மூலம் கோடிகளை சம்பாதித்த போதும் படத்தில் பயன்படுத்தப்பட்ட உண்மை கதையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் சூர்யா எந்தவித உதவியும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

எனினும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த திரைப்படத்தை பாராட்டி டிவிட்டரில் பதிவிட்டார். எனினும் சமூகநீதி தான் தங்களது கொள்கை என்று மார்தட்டிக் கொள்ளும் திமுக உண்மையில் அதை எப்போதும் பின்பற்றியதில்லை என்பதற்கு சான்றாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் தங்கியுள்ள இருளர் இன மக்களை திமுக பிரமுகர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளாக இந்த பகுதியில் தங்கி மரம் வெட்டுதல், மீன்பிடித்தல், கூலி வேலை செய்தல் என்று 12க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சரியான தங்குமிட வசதி இல்லாததால் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

கர்ப்பிணிகள் கைக்குழந்தைகளை உள்ளடக்கிய நான்கு இருளர் குடும்பங்கள் அருகே உள்ள பாப்பாங்குழி கிராமத்தில் குப்பைகளை சேகரித்து பிரித்து எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள டென்ட் கொட்டகையில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனால் அங்கு கொசுக்கள் அதிகம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று இரவில் உறங்கியுள்ளனர்.

இது பிடிக்காத உள்ளூர் திமுக பிரமுகர் லோகநாதன் என்பவர் இருளர் மக்கள் கோவிலில் தங்க கூடாது என்றும் மீறினால் அவர்களை அடித்து டெண்ட் கொட்டகையில் வைத்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவதாகவும் மிரட்டியுள்ளார். "டென்ட் கொட்டகை மழையிலிருந்து எங்களை பாதுகாத்தது. ஆனால் அங்கு கொசுக்கள் அதிகம் இருந்ததால் கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் நோய் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள கோவிலில் இரவு நேரங்களில் உறங்க முடிவு செய்தோம்" என்று 3 மாதக் குழந்தையின் தந்தை பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தங்களை வேறு இடத்துக்கு செல்லுமாறு திமுக பிரமுகர் லோகநாதன் வற்புறுத்தி வருவதாக கூறிய பாலகிருஷ்ணன், "கடந்த புதன்கிழமை பாலகிருஷ்ணன் எங்களிடம் வந்து "கோவில் உங்களுக்கான இடம் இல்லை" என்று கூறி அங்கு உறங்கக் கூடாது என்று மிரட்டினார். மேலும் அவர் சொல்வதை கேட்காவிட்டால் டெண்ட் கொட்டகையில் அடைத்து வைத்து கொளுத்தி விடுவதாகவும் மிரட்டினார்" என்றும் கூறியுள்ளார்.

திமுக பிரமுகரின் மிரட்டலுக்கு பயந்து அனைவரும் இரவில் தூங்காமல் அச்சத்தில் இருந்துள்ளனர். பாலகிருஷ்ணன் சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்ததாக கூறியுள்ளார். லோகநாதன் இரண்டு முறை, ஒருமுறை ஆயுதங்களுடனும் மற்றொரு முறை அடியாட்களுடனும், தங்களை சந்தித்து மிரட்டியதாகவும் கூறுகின்றனர். புகார் அளித்தும் காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. முதல் தகவல் அறிக்கை கூட இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று தி நியூ‌ இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது. எனினும் காஞ்சிபுரம் எஸ்.பி விசாரணை நடந்து வருவதாக கூறியதாகவும் கூறப்படுகிறது.

தங்க வீடு இல்லாததால் தாங்கள் படும் அவதி குறித்து வேதனை தெரிவித்த இருளர்கள், ஒரு சிறிய வீட்டையாவது அரசு கட்டிக் கொடுத்தால் பாதுகாப்பாக உணர்வோம் என்று கூறுகின்றனர். வீடு மற்றும் கழிவறை வசதி இல்லாததால் பெண்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டியிருக்கிறது என்றும் அந்த சமயத்தில் பிற ஆண்கள் தொந்தரவு செய்யாமல் இருக்க காவல் காக்கும் கொடுமையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இருளர் இனப் பெண்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

உண்மை நிலை இவ்வாறு இருக்கும்போது குறிப்பிட்ட சமூகத்தினரை தவறாக காட்டியும் உண்மையில் தவறு செய்த குறிப்பிட்ட மதத்தினர் பற்றிய உண்மைகளை வேண்டுமென்றே மறைத்தும் ஜெய் பீம் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது திமுகவுக்கு ஆதரவான மனநிலையை ஏற்படுத்துவது தான் திரைப்படத்தின் நோக்கமோ என்ற கேள்வியை எழுப்புகிறது. முதல்வரின் பாராட்டு அதை‌ உறுதிப்படுத்துகிறது. நடுநிலையான சமூக அக்கறை கொண்டவர் என்றால் திமுக பிரமுகரின் இந்த அராஜகத்தைப் பற்றியும் திரைப்படம் எடுப்பாரா சூர்யா? அப்படி எடுத்தால் அதிலாவது உண்மையை உரைப்பாரா? சமூக நீதிக் கட்சி என்று தம்பட்டம் அடிக்கும்‌ திமுக லோகநாதனுக்கு பாடம் கற்பிக்குமா? முதல்வர் இருளர் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுப்பாரா?

Source: TNIE

Next Story
கதிர் தொகுப்பு
Trending News