பெரிதும் உதவாத சமூக ஊடக பிரிவு, வேறு வழியில்லாமல் வெளியாட்களை நம்ப வேண்டிய சூழ்நிலையில் தி.மு.க.! #dmk #dmkitwing
பெரிதும் உதவாத சமூக ஊடக பிரிவு, வேறு வழியில்லாமல் வெளியாட்களை நம்ப வேண்டிய சூழ்நிலையில் தி.மு.க.! #dmk #dmkitwing

அண்ணா அவர்கள் ஒருமுறை சொன்னார்கள், "ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும்" என்று அதாவது இரண்டுமே தேவையில்லை என்பது அவரது நிலைப்பாடு. அதே அண்ணா இன்றைய தி.மு.க. ஐ.டி. விங்க் எனப்படும் சமூக ஊடக பிரிவின் செய்லபாடுகளை பார்த்தால் "ஆட்டுக்கு தாடியும், தி.மு.க. விற்கு ஐடி விங்கும்" என்று உவமையாக கூறியிருப்பார். அந்த அளவிற்கு தி.மு.க. வின் ஐடி விங்க் செயல்பாடுகள் உள்ளன.
இது பற்றிய ஒர் அலசலில், என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் இறங்கினோம். கிடைத்த தகவல்கள் அனைத்தும் பட், படீர், பட்டாசுதான்.
தி.மு.க. ஐடி விங்க் செயல்பாடுகள் - ஒரு மாநில கட்சி அதுவும் தமிழகத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் அமர முடியாத கட்சியின் சமூக ஊடக பிரிவு எவ்வாறு செயல்பட வேண்டும்? நடக்கிற விஷயங்களை கட்சிக்கு சாதகமாக்க வேண்டும். தலைவர்களின் பேச்சை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் அலை வேண்டும்.
கட்சியின் வரலாறுகளை அக்கு வேறாக பிரித்து மக்களின் பார்வைக்கு "பார்த்தாயா இதுதான் எமது கட்சி என கொண்டு சேர்க்க வேண்டும்", மாறாக "எவனோ விசிலடிக்கிறான்" என்பது போல் மாவட்டம் தோறும் ஐடி விங்க்- ற்காக வெரிபைட் அக்கவுண்ட் வைத்துக்குகொண்டு நிர்வாகிகள் அனுப்பும் வாட்ஸ் அப் இமேஜ்களை அதுவும் நடந்து 3 நாள் கழித்து கடனே என்று பதிவேற்ற வேண்டியது, அன்றைக்கு இவர்கள் கட்சி தலைவரே என்ன சொன்னார் என்று கேட்டால் பதில் தெரியாமல் விழிப்பது, இதில் இன்னும் ஒருபடி மேலே போய் சில மாவட்ட ஐடி க்கள் நாள் கணக்கில் லாக் இன் செய்வதே இல்லை.
இது பற்றி கட்சியின் தொண்டர் ஒருவரிடம் கேட்டபோது ஒரே அடியில் நம்மை வாயடைத்தார் "என்னது தி.மு.க விற்கு ஐடி விங்க் இருக்கா?" நான் பா.ஜ.க ஐடி விங் பத்தி கேள்வி பட்ருக்கேன் எங்க கட்சில அப்படி இல்லையேப்பா! நீங்க தப்பா சொல்றீங்க" என்று நம்மை சந்தேக பட்டார். இவ்வளவிற்கு கட்சியில் இரண்டு முறை உள்ளாட்சி தேர்தலில் நின்று ஜெயித்தவர். காலையில் காய்கறி வாங்க சென்றாலும் கரைவேட்டி தவிர்த்து மற்ற வண்ண உடைகளில் அவரை பார்க்க இயலாது. அந்த அளவில் இருக்கு கட்சிகாரர்களுக்கும் லோக்கல் ஐடி விங்க் ற்க்குமான தொடர்பு.
மேலும், ஐடி விங்க் - ல் பகுதி நேரமாக இயங்கும் ஒருவரிடம் பேச்சு கொடுத்ததில் இருந்து அவர் கூறியது, "இல்லை ப்ரோ பார்வேர்ட் மெஸேஜ் அனுபுவாங்க, நான் அப்டியே 20 வாட்ஸ்அப் குரூப் அனுப்புவேன் அவ்ளோதான்" என்றார். சரிங்க காலைல என்ன மெஸேஜ் பார்வேர்ட் பண்ணீங்க? ன்னு கேட்டதற்க்கு "சாரி ப்ரோ படிச்சு பார்க்கலை"ன்னு சர்வசாதரணமாக கூறினார். அதாவது தான் என்ன மெஸேஜ் மக்களுக்கு பார்வேர்ட் செய்கிறோம் என்பதையே படித்து பார்க்காத ஐடி விங்க் ஊழியரின் செயல்பாடு.
இதனாலயே மக்களிடம் சமூக வலைதளங்களில் செயல்பாடு குறைந்து போலி ஐடிக்கள் மூலம் தகவல்கள் தவறாக இருந்தாலும் சரி அது எப்படியோ மக்களிடம் போய்ச்சேர்ந்தால் சரி என தி.மு.க. இறங்கிவிட்டது.
இதில் நடப்பது என்னவென்றால், சில தனி நபர்கள் பெயரில் ஐடி க்கள் செயல்படும். அவர்கள் சாதாரண தனிநபர் போலவே தங்கள் ஐடிக்களில் இருந்து உணவு, உடை, காதல், மதுபானம், சினிமா போன்ற நிகழ்வுகளை ட்விட் செய்துகொண்டே இருப்பார்கள் திடீரென "கலைஞர் எங்களை படிக்க வைத்தார்", "பெரியார் இல்லையேல் நாம் சட்டை போட்டிருக்க முடியாது", "வீர மணிதான் எங்களுக்கு அறிவு ஊட்டினார்", "ஸ்டாலின் செயல்பாடுகள் அருமை" என தமிழ் சினிமாவின் காமெடி ட்ராக் எழுதுபவர்களுக்கே டஃப் குடுக்கும் அளவிற்கு காமெடி செய்வார்கள்.
மற்ற தனிதபர் ஐடிக்களிடம் சண்டை வேறு இழுப்பார்கள், "உனக்கு திராவிடம் பற்றி தெரியுமா?", "தமிழ் வரலாறு தெரியுமா? என சண்டை போட்டுவிட்டு அடுத்து உதயநிதியின் ட்விட்டை ஆர்டி செய்து கொண்டிருப்பார்கள். இதனால் புதிதாக சமூக வலைதளத்தில் கணக்கு தொடங்கி வருபவர்கள் கூட "ஆஹா தி.மு.க. விற்க்கு இவ்வளவு ஆதரவா?" என வாய்பிளக்கும் அளவிற்கு இருக்கும். ஆனால் உண்மையில் அந்த போலி ஐடிக்கள் கூலி வாங்கியது இவர்களுக்கு தெரியாதல்லவா?
இப்படி போய்க்கொண்டிருக்கிறது தி.மு.க. வின் சமூக வலைதள செயல்பாடுகள், அதாவது ஐடி விங்க்ல் காசுக்கு ஏனோ, தானோ என்று வேலை செய்யும் ஆட்களை வைத்துவிட்டு, வெளியில் கூலி குடுத்து தனிநபர் ஐடிக்களை இயக்குவது என இரட்டை வேடம். ஏனெனில் ஏதாவது ஒன்று கைகொடுக்காதா என்ற ஆசைதான்.
இதையெல்லாம் பார்க்கும் போது, "வீதி, வீதியாக பேசி, பேசி வளர்ந்த கட்சி இன்று பேச ஆள் இல்லாமல் தத்தளித்து கொண்டு இருப்பது பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ளது", என்ன செய்வது அவர்கள் தலைமையே வேடிக்கைதான்!