ராமர் கோவிலுக்கு நிதி வழங்கிய தி.மு.க. எம்.எல்.ஏ., தேர்தல் நாடகமா.?
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து தரப்பு மக்களும் ராமர் கோவில் கட்டுவதற்காக நிதி அளித்து வருவது கடந்த சில நாட்களாக அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் நன்கொடை வழங்கி உள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் நிகழ்வில் மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக இந்து அமைப்பினர் பொது மக்களிடம் நிதி வசூல் செய்து வருகின்றனர். இந்தியாவில் பல்வேறு இடங்களில் இருக்கும் ஏழை மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை தங்களால் முயன்ற உதவியை பொருளாகவும், பணமாகவும் அளித்து வருகின்றனர்.
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து தரப்பு மக்களும் ராமர் கோவில் கட்டுவதற்காக நிதி அளித்து வருவது கடந்த சில நாட்களாக அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இந்து கோவில்களையும் இந்து சமய சடங்குகளையும் இந்து கடவுள்களையும் மட்டுமே விமர்சித்து வரும் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கவைச் சேர்ந்த செஞ்சி தொகுதி முஸ்லிம் எம்.எல்.ஏ. மஸ்தான் என்பவர் ராமர் கோவில் கட்டுவதற்காக ₹11,000 ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
DMK is Rattled, Karma is Catching up !@CTRavi_BJP @blsanthosh @annamalai_k @rvaidya2000 @ranganaathan pic.twitter.com/RpXZAMUJBb
— காஸ்மிக்பிளின்கர் 🇮🇳 (@cosmicblinker) February 1, 2021
ராமர் என்ற ஒருவர் இருந்ததாகவும் அவர் இன்ஜினியரிங் படித்ததாகவும் அவர் ராமர் சேது பாலத்தை கட்டினார் என்றும் வரலாற்று ரீதியான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா என்று சந்தேகம் தெரிவித்த திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவர் கருணாநிதி வழியில் வந்த அவர் கட்சியின் எம்.எல்.ஏ ஒருவர் ராமருக்கு கோவில் கட்டுவதற்கு நிதி வழங்கி உள்ளாரா என்று பொதுமக்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கின்றது. இதனால் இவ்வளவு நாள் இந்துக்களின் மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி வந்த தி.மு.கவினர் தற்போது இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.