விளம்பரத்துக்கு ஆசைப்பட்டு கொரொனொவை பரப்பிய தி.மு.க. - முதல்வர் நச்.! #Dmk #EPS #Coivd
விளம்பரத்துக்கு ஆசைப்பட்டு கொரொனொவை பரப்பிய தி.மு.க. - முதல்வர் நச்.! #Dmk #EPS #Coivd

கோவையில் கொரோனோ தடுப்பு பணிகளை பார்வையிட்ட பின் கலெக்டர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,
அப்போது அவர் கூறுகையில் "தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை. நான் சேலத்திற்கு மட்டும் முதல்வர் என எதிர்க்கட்சி தலைவர் விமர்சித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். இந்தியாவிலேயே நோயை வைத்து அரசியல் நடத்தி வரும் ஒரே அரசியல் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான். தனது இருப்பை காட்டிக்கொள்வதற்காக தினந்தோறும் ஸ்டாலின் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். சோதனையான நேரத்தில் அரசுக்கு ஆதரவு அளிக்காமல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். கொரோனா பரவலைத் தடுக்க என்றைக்காவது ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கியுள்ளாரா?
அரசியல் ரீதியாக அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் ஸ்டாலின் செயல்படுகிறார். எந்த மாநிலத்திலும் எந்த ஒரு எதிர்க்கட்சித் தலைவரும் நோயை வைத்து அரசியல் செய்யவில்லை. கொரோனா தொற்று அதிகரிக்க திமுகதான் காரணம்.
விளம்பரத்திற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக நிவாரண பணிகளை திமுகவினர் மேற்கொண்டனர். மருத்துவ நிபுணர்களின் அறிவுரைகளை ஏற்காமல் திமுக விளம்பரத்திற்காக செய்த நிவாரண பணியால் இன்று ஒரு எம்எல்ஏவை இழந்துள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின்படி நிவாரணப் பணிகளை வழங்கியிருந்தால் இன்று எம்எல்ஏவை இழக்கும் அசம்பாவிதம் நடந்திருக்காது". என கூறினார்