Kathir News
Begin typing your search above and press return to search.

அ.ம.மு.க பிரமுகர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் - பின்னணியில் தி.மு.க பிரமுகர்?

அ.ம.மு.க பிரமுகர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் - பின்னணியில் தி.மு.க பிரமுகர்?

அ.ம.மு.க பிரமுகர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் - பின்னணியில் தி.மு.க பிரமுகர்?
X

Mohan RajBy : Mohan Raj

  |  16 Feb 2021 4:32 PM GMT

திருப்பத்தூரில் அ.ம.மு.க மாணவரணி செயலாளர் மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதன் பின்னணியில் தி.மு.க பிரமுகர் இருக்கலாம் என சந்தேகம் கிளம்பியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் கவுதம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வானவராயன். இவர் திருப்பத்தூர் மாவட்ட அ.ம.மு.க மாணவரணி செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி இந்து தற்பொழுது நிறைமாத கர்ப்பிணி. வானவராயன் கட்சிப்பணியுடன் சேர்த்து தனியாக வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார்.

இந்நிலையில், வானவராயன் தனது வீட்டில் இருந்து தனது வட்டி தொழில் வசூலுக்கு தனது இருசக்கர வாகனத்தில் மாலை புறப்பட்டார். வசூல் முடித்துக் கொண்டு திரும்பி பூங்காவனத்தம்மன் கோயில் வழியாக தனது வீடு நோக்கி வந்துக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு மறைந்து இருந்த 6 பேர் கொண்ட கும்பல் வானவராயனை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தனர். சராமரியாக வெட்டிய அவர்களிடம் இருந்து வானவராயன் தப்பியோட முயன்றார். ஆனார், மர்ம கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வானவராயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வானவராயனுக்கும் கவுதம் பேட்டையை சேர்ந்த தி.மு.க பிரமுகர் ஒருவருக்கும் தொழில் ரீதியாக முன்விரோதம் இருந்தது. இருவரும் அடிக்கடி மோதிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த கொலை நடைபெற்றிக்கலாம் எனவும் காவல்துறை தரப்பில் சந்தேகிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News