Kathir News
Begin typing your search above and press return to search.

நாளுக்கு நாள் இந்துக்களை பகைத்துக்கொண்டு செல்வாக்கை இழக்கிறதா தி.மு.க - இந்துக்கள் பாவம் சும்மா விடுமா தி.மு.க. வை? #DMK #HindhuPeople #Karma

நாளுக்கு நாள் இந்துக்களை பகைத்துக்கொண்டு செல்வாக்கை இழக்கிறதா தி.மு.க - இந்துக்கள் பாவம் சும்மா விடுமா தி.மு.க. வை? #DMK #HindhuPeople #Karma

நாளுக்கு நாள் இந்துக்களை பகைத்துக்கொண்டு செல்வாக்கை இழக்கிறதா தி.மு.க - இந்துக்கள் பாவம் சும்மா விடுமா தி.மு.க. வை? #DMK #HindhuPeople #Karma
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 July 2020 7:58 AM IST

ஏற்கனவே இந்துக்களை இழிவுபடுத்தி திமுக அடிமேல் அடி வாங்கி வருகிறது. மேலும் கருப்பர் கூட்டம் மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது போதாது என்று இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய திமுக இளைஞர் அணி நிர்வாகி கைது, துப்பாக்கிச் சூடு வழக்கில் திமுக எம்.ஏல்.ஏ கைது, இந்து கடவுள்களை இழிவுப்படுத்தும் கருப்பர் கூட்டம் திமுகவிற்கு ஆதரவு போன்ற பிரச்சனைகள் திமுக தலைமைக்கு இடி விழுந்தது போல் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கனவே ஊழல் கட்சி என மக்களிடம் ஓட்டு வாங்க முடியாமல் 10 ஆண்டுகளாக ஆட்சியில் அமர முடியவில்லை இப்பொழுது ரவுடியிச கட்சி, இந்து மத எதிர்ப்பு கட்சி என இரு மாபெரும் தழும்புகள் திமுக'வின் மீது பதிந்துள்ளன.

சமூக வலைத்தளங்களில், சமீப காலமாக திமுகவுக்கு எதிரான குரல் மிக அதிகமாக ஓங்கி ஒலித்து வருகிறது. திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்கிற எண்ணமும் மக்களிடையேவும், சமூக வலைதளத்தில் தீவிரமாக செயல்படுவோர்களிடமும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து இந்து மதத்தையும், இந்து கடவுளகளையும் இழிவு படுத்தி வீடியோக்களை பதிவிட்டு வரும் கருப்பர் கூட்டம் என்கிற அமைப்பு கந்த கஷ்டி கவசம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு ஒட்டுமொத்த இந்துக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதற்கிடையே, திமுகவிற்கு ஆதரவாக இந்த கருப்பர் கூட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் பிரச்சாரம் செய்தவர்கள் என சில புகைப்படங்களுடன் சமூகவலைதளங்களில் பரவி வைரலானதால், திமுக இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிரான கட்சி அல்ல, இந்துக்களுக்கு எதிரான கட்சி என நெட்டிசன்கள் வருத்தெடுத்து வருகின்றனர்.

இதைப்போல், தமிழகத்தில் வன்முறை கலாச்சாரம் அதிகரித்துவிட்டதாக அறிக்கையை வெளியிட்டு வரும் ஸ்டாலினுக்கு அதிர்ச்சியளித்து தலைவலியை அதிகரிக்க செய்துள்ளார், துப்பாக்கியால் சுட்டு, காவல்துறையினரிடம் கையும் களவுமாக சிக்கி, தற்போது சிறையில் கம்பி எண்ணி வரும் திமுக எம்.எல்.ஏ ஒருவர். இனி, சட்டம் ஒழுங்கை பற்றி ஸ்டாலின் எப்படி அறிக்கை வெளியிடுவது என்ற யோசனையில் இருக்கிறார் என பேசி வருகிறார்களாம்.

ஏற்கனவே கட்சியின் இமேஜை உயர்த்த ரூ.380 கோடி கூலிக்கு ஆள் வைத்திருப்பது மக்களிடையே ஏளனமாகவும், கட்சியினரிடையே கடுப்பையும் ஏற்றி வரும் நிலையில் திமுக'வின் மேல் விழும் இந்த அடி இந்துக்களின் சாபமோ அல்லது செய்த கர்ம வினையோ என திமுக தலைமை குழம்பியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News