மக்கள் விரும்பாத திமுக! விளம்பரபடுத்தியாவது விரும்ப வைக்க முயற்சிக்கும் ஐ-பேக் நிறுவனம்!! - எப்படி செயல்படுகிறது இந்த விளம்பர முறை ஒரு பார்வை #DMK #iPac
மக்கள் விரும்பாத திமுக! விளம்பரபடுத்தியாவது விரும்ப வைக்க முயற்சிக்கும் ஐ-பேக் நிறுவனம்!! - எப்படி செயல்படுகிறது இந்த விளம்பர முறை ஒரு பார்வை #DMK #iPac

மக்களுக்கு நல்லது செய்வோம், சமூக நீதியை நிலை நாட்டுவோம், தமிழகத்தை தலைகீழ் ஆக்குவோம் அதற்கு எங்களை விட்டால் ஆள் இல்லை என மார்தட்டிகொண்டு இருக்கும் திமுக'வை பிரபலபடுத்த ஐ-பேக் நிறுவனத்தின் 'சதுரங்க வேட்டை' வேலைகள் சமீப காலமாக அதிகமாகி வருகின்றன, இது பற்றிய ஒரு பார்வை!
பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் பாண்டை'வின் நிறுவனமான ஐ-பேக் நிறுனத்துடன் திமுக ஒப்பந்தம் போடப்படுள்ளது இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு
ரூ.380 கோடி ரூபாய் ஆகும் இதன் மூலமாக மாவட்ட வாரியாக ஆட்களை நியமித்து அவர்கள் மூலமாக திமுக கட்சியின் புகழை போலியாக பரப்ப ஆயத்தமாகி வருகின்றனர். அதாவது கட்சி சம்மந்தமாக ஒருவரும் இதில் திமுக ஈடுபடுத்த போவதில்லை மாறாக ஐ-பேக் நிறுவனத்தின் ஊழியர்கள் மாவட்டம் தோறும் ஆட்களை நியமித்து அவர்கள் மக்களுடன் மக்களாக இருந்து அவர்கள் மூலமாக பொய்யான புகழை பரப்ப திட்டம், இதன்மூலம் மக்கள் மத்தியில் திமுக'விற்கு புகழ் உள்ளது போன்ற மாயதோற்றத்தை உருவாக்கி அதன் மூலம் 2021 தேர்தலை சந்திக்க திமுக முடிவு செய்துள்ளது.
இதன் முதற்கட்டமாக மாவட்டம் தோறும் பட்டதாரிகளை தேர்வு செய்து நியமித்து அவர்கள் மூலம் வாட்ஸ் அப் குழுக்கள், போலி ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஐடி'க்கள் உருவாக்கி அந்த சமூக வலைதளங்கள் மூலம் திமுக'வின் பொய்யான பரப்புரைகள் பரப்ப திட்டம்.
உதாரணமாக - தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒருவரை நியமித்து அவர் மூலம் கீழ்க்கண்ட விஷயங்கள் சமூக வலைதளங்கள் மூலம் பொய்யாக பரப்படுவது
#1 எதிர்கட்சி தலைவராக ஸ்டாலினின் செயல்பாடுகள் அருமையோ அருமை, இவர் முதல்வர் ஆனால் தமிழகம் மாறிவிடும்,
#2 உதயநிதி'யின் செயல்பாடுகள் அப்படியே அரசியலை கரைத்து குடித்தவர் போல் இருக்கின்றன! மேலும் இவர்தான் திமுக'வின் விடிவெள்ளி.
#3 மத்திய, மாநில அரசுகள் மக்களின் நன்மைக்காக செய்யும் செயல்களை மக்களிடம் தவறாக கொண்டு செல்வது. உதாரணமாக தேசிய குடியுரிமை சட்டத்தால் நாட்டில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் வெளியேற்றபடுவர் என்று தவறான தகவல் பரப்புவது.
மேற்கூறிய அனைத்துமே திமுக'வில் உள்ள கட்சியின் பொருப்பாளர்களோ அல்லது கட்சியின் தொண்டர்களோ செய்வது இல்லை மாறாக ஐ-பேக் நிறுவனத்தால் மாதம்தோறும் ரூ.12000 முதல் ரூ.25000 வரை சம்பளம் குடுத்து ஆட்களை நியமித்து அவர்கள் உருவாக்கிய போலி சமூக வலைதள கணக்குகள் மூலம் தவறான தகவல்களாக உருவாக்கப்பட்டு அவை அனைத்தும் வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்டு தவறாக பரப்படுகின்றன.
மேற்கூரிய தகவல்கள் மக்களிடம் செல்லும் பட்சத்தில் அவை அனைத்தும் உண்மைதன்மை விசாரிக்காமல் மக்கள் நம்பி விடுகின்றனர் இதனால் மத்திய, மாநில அரசாங்கங்கள் மக்களுக்கு துரோகம் இழைக்கின்றன, மக்களை வாட்டுகின்றன என பொய்யான தகவலால் மக்கள் திசை திருப்பபடுகின்றன.
இது மட்டுமில்லாமல் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் தன்னிச்சையாக செய்யும் உதவிகளை திமுக'வின் சார்பாக செய்யும் உதவிகள் போல் விளம்பரபடுத்த படுகின்றன.
அரசியல் என்பது தன்னலம் பாராமல் மக்களுக்காக பொதுவாழ்வில் உழைப்பது.கட்சி என்பது சுயநலத்திற்காக பிரித்தாளபடும் மக்களை ஒருங்கிணைத்து அவர்கள் நலனுக்காக ஆட்சி பீடத்தில் அமர்ந்து சேவை செய்வது.
ஆனால் திமுக'வோ அரசியலை தன் குடும்பத்திற்கு சொத்துக்கள் சேர்க்கும் தொழிலாகவும், அரசியலை தன் குடும்ப உறுப்பினர்கள் பதவிகளில் அமர வைக்க மட்டுமே நடத்தப்படும் அமைப்பாகவும் பாவித்து செயல்படுகிறது. இதற்காகவே ரூ.380 கோடி செலவு செய்து விளம்பர நிறுவனம் வைத்து தங்களை விளம்பர படுத்தி கொள்கின்றனர். ரூ.380 கோடி செலவு செய்த இவர்கள் பதவிக்கு வந்து மக்களுக்கா சேவை செய்ய போகிறார்கள். ரூ380 கோடி முதலீடு செய்து ரூ.3800 கோடியாவது குறைந்தபட்சம் சம்பாதிப்தைதான் குறிக்கோளாக வைப்பார்கள். மேலும் குடும்ப உறுப்பினர்களை பதவியில் வைத்து அழகுபார்க்க தான் இவர்களுக்கு நேரம் இருக்குமே தவிர மக்களை பற்றி சிந்திக்க துளியும் விரும்பமாட்டார்கள்.