காவல்துறை செய்தால் தப்பு என தம்பட்டம் அதே கட்சிக்காரன் செய்தால் 'தற்காலிக நீக்கம்' தி.மு.க. வின் சமூக நீதி இதுதானா? #DMK #JusticeforSasikala
காவல்துறை செய்தால் தப்பு என தம்பட்டம் அதே கட்சிக்காரன் செய்தால் 'தற்காலிக நீக்கம்' தி.மு.க. வின் சமூக நீதி இதுதானா? #DMK #JusticeforSasikala
By : Kathir Webdesk
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே நைனார் குப்பத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியதுடன் கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட திமுக இளைஞரணி செயலாளரார் தேவேந்திரன்'னை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக செய்தி வெளியானதும் சமூக வலைதளத்தில் #JusticeForSasikala என நெட்டிசன்கள் ட்ரெண்டிங் செய்ததையடுத்து. இது தொடர்பான நடவடிக்கை வேகமெடுத்துள்ளது.
இதனையடுத்து கொலையாளி திமுக இளைஞரணி செயலாளர் தேவேந்திரன் செயலை அனைத்து தரப்பினரும் ஆத்திரத்துடன் கண்டித்து வருகின்றனர். ஆனால் திமுக'வின் செயலோ வேறு மாதிரி இருக்கின்றது.
சாத்தான்குளம் காவல்துறை பாதுகாப்பில் இருந்த இருவரின் கொலை வழக்கில் காட்டிய வேகம், அரசாங்கத்தை கேட்ட கேள்விகள், உடனே ஓடிசென்று கனிமொழி, உதயநிதி பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்த்தது, அவர்களுக்கு குடும்பம் இருக்கிறது வாழ வேண்டும் என 25 லட்சம் உதவிதொகை அளித்தது என திமுக'வின் செயல்பாடுகளில் 10 சதவீதம் கூட செங்கல்பட்டு, நைனார் குளத்தில் இறந்த சசிகலாவில் விஷயத்தில் திமுக செய்யவில்லை. காரணம் கொலையாளி திமுக இளைஞரணி செயலாளர்!
மேலும், இரவு பகல் பாராமல் ஆளுங்கட்சியை விமர்சித்து இ-பாஸ் கூட இல்லாமல் ஓடி உழைத்த உதயநிதியோ யார் குற்றவாளியோ தண்டிக்க படவேண்டும் என ஓரே ஒரு ட்விட்'ல் முடித்துக்கொண்டார். கட்சித்தலைவர் ஸ்டாலினோ அவர்களை கட்சியில் இருந்து 'தற்காலிக நீக்கம்' என பெயரளவில் அறிவித்துள்ளார்.
அதாவது, கொலையாளியாகவே இருந்தாலும் குற்றம் சாட்டபட்டவர் திமுக'வை சேர்ந்தவர் அதனால் கட்சி மானம் போய்விடும் என கருதும் திமுக உயிரிழந்த பெண்ணிற்கு நியாயம் கிடைக்க பெயரளவில் கூட எண்ணவில்லை! பாலியல் வன்கொடுமையில் கொல்லப்படது பெண்ணாகவே இருந்தாலும் செய்தது திமுக'காரர் அதனால் பெருதுபடுத்த வேண்டாம் என கருதுகிறது திமுக. "ஊருக்கு மட்டும் உபதேசம்".
சாத்தான்குளம் சம்பவத்தை வைத்து ஒட்டுமொத்த காவல்துறையே கெட்டுவிட்டது என அவதூறு பரப்பிய திமுக இன்று திமுக'காரர் செய்த இந்த கொலையை வைத்து ஒட்டுமொத்த கட்சியே கெட்டுவிட்டது என ஒப்புக்கொள்ளுமா? எங்கே கட்சி தலைவர்தான் குற்றவாளியை 'தற்காலிக நீக்கம்'தானே செய்திருக்கிறார் ஒருவேளை அவர் தண்டனை முடிந்து வந்தால் கூட திமுக'வில் சேர்த்து இன்னும் பல பெண்களை ஆபாச படம் எடுத்து தன் ஆசைக்கு இணக்க வைத்தாலும் அதற்க்கும் திமுக 'தற்காலிக நீக்கத்தை' தான் பதிலாக தருமா?
மரணத்தில் நீதி கேட்கும் கட்சி என்று ஊரார் முன்னே காட்டி கொண்டாலும் மரணத்தில் அரசியல் மட்டுமே திமுக செய்யும் என்பது திமுக கட்சி தலைவர்களின் செயல்பாடுகளில் இருந்தே தெரிகிறது.