Kathir News
Begin typing your search above and press return to search.

மாவோயிஸ்ட் முக்கிய தலைவனுடன் தொடர்பு: தி.மு.க பிரமுகர் கைது!! பயங்கரவாதிகளின் தோழனா தி.மு.க?

மாவோயிஸ்ட் முக்கிய தலைவனுடன் தொடர்பு: தி.மு.க பிரமுகர் கைது!! பயங்கரவாதிகளின் தோழனா தி.மு.க?

மாவோயிஸ்ட் முக்கிய தலைவனுடன் தொடர்பு: தி.மு.க பிரமுகர் கைது!! பயங்கரவாதிகளின் தோழனா தி.மு.க?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Nov 2019 10:06 AM GMT


கடந்த மாதம் 28-ஆம் தேதி கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பாடி வனப்பகுதியில் மணிவாசகம், கார்த்தி, அரவிந்த் மற்றும் ரமா என்ற அஜிதா ஆகிய 4 மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் நான்கு பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.


மணிவாசகம், கேரள மாநில மாவோயிஸ்ட் பயங்கரவாத இயங்க தலைவனாக செயல்பட்டு வந்தவன்.


இவன் சேலம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவன். இவன் தனது 20 வயதில் இருந்தே நாட்டுக்கு எதிரான நாசவேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளான். அப்பாவி மக்களை மூளை சலவை செய்து பயங்கரவாதிகளாக மாற்றுவதில் கைதேர்ந்தவன். இவன் மீது குண்டு வைத்தது உள்பட 4 வழக்குகள் தமிழகத்தில் உள்ளன.


கேரள மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் தலைவன் குப்பு தேவராஜ் சுட்டுகொல்லப்பட்ட பிறகு, கேரள மாநில மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளின் தலைவன் ஆனான் மணிவாசகம். இவனால் கேரளாவின் கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, பாலக்காடு , மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் மத்திய அரசு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு போன்ற மாவட்டங்களை இடதுசாரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்தது.


இதனைத்தொடர்ந்து கேரளாவில் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளை நரேந்திர மோடி அரசு முடுக்கி விட்டது. இதனால் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளுக்கு கூஜா தூக்கிவந்த கேரள கம்யூனிஸ்ட் அரசு. வேறு வழியில்லாமல் நடவடிக்கைகளை மேற்கொண்டது.


இதன்பின்னர்தான், கடந்த மாதம் 28-ஆம் தேதி மணிவாசகம் உள்பட 4 மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளும் கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


சுட்டுகொல்லப்பட்ட மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் தலைவன் மணிவாசகத்தின் உடலை அவனின் சொந்த ஊரான சேலம் ராமமூர்த்தி நகரில் அடக்கம் செய்யக்கூடாது என்று அந்த ஊர் மக்கள், சேலம் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனுகொடுத்தனர். அவனால் 40 ஆண்டுகளாக நிம்மதியை இழந்துள்ளோம் என்று அவர்கள் கொதித்து எழுந்தனர்.


இப்படிப்பட்ட மாவோயிஸ்ட் தலைவன் மணிவாசகத்துக்கு, சேலம் அயோத்தியாபட்டினம் திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தோழன் என்ற அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகி உள்ளது.


மணிவாசத்துடன் யார் யாரெல்லாம் பேசி உள்ளனர் என்பது குறித்து அவனது தொலைபேசியை ஆய்வு செய்த போலீசார், இதனை கண்டுபிடித்து உள்ளனர்.



மாவோயிஸ்ட் முக்கிய தலைவனுடன் தொடர்பு: தி.மு.க பிரமுகர் கைது!! பயங்கரவாதிகளின் தோழனா தி.மு.க?


சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் பயங்கரவாத தலைவன் மணிவாசகத்துடன், தொலைபேசியில் திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தொடர்ந்து பேசியுள்ளார். அவன் சுட்டுக்கொல்லப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்புகூட விஜயகுமார் பேசியுள்ளார்.


மாவோயிஸ்ட் முக்கிய பயங்கரவாதி மணிவாசகத்துடன் திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமாருக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்துகொண்ட போலீசார், விஜயகுமாரிடம் விசாரணை நடத்துவதற்காக, அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.


ஆனால் விஜயகுமார் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் வழக்கம்போல அவரது மிரட்டல் தொனியில் பேசி உள்ளார்.


இதனைத்தொடர்ந்து போலீசார், விஜயகுமாரை கைது செய்து குண்டுகட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளனர்.


திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளுக்கு எந்த வகையில் எல்லாம் உதவி செய்து உள்ளார் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.


இதுவரை நில அபகரிப்பு, மணல் கொள்ளை, அடாவடி, ரவுடியிசம், கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்து போற்றவற்றில் புகழ் கொடி நாட்டிய திமுக, இப்போது பயங்கரவாதிகளின் தோழனா என்ற புதிய கேள்வியை மக்கள் கேட்டுள்ளனர் .


Next Story
கதிர் தொகுப்பு
Trending News