Kathir News
Begin typing your search above and press return to search.

நாங்குநேரி இடைத்தேர்தல்: ஓட்டுக்கு பணம் கொடுத்த தி.மு.க-வினரை சிறை பிடித்த பொது மக்கள்! கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!

X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Oct 2019 1:26 PM GMT

வருகிற 21-ஆம் தேதி நாங்குநேரியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரை ஆதரித்து தலைவர்களும் அவர்களது தொண்டர்களும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் ரூபி மனோகரன் வேட்பாளராக களம் இறங்குகிறார். அ.தி.மு.க வேட்பாளராக நாராயணன் போட்டி இடுகிறார்.

21-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மூலைக்கரைப்பட்டி, அம்பலம் என்ற இடத்தில் டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த பணத்தை பொது மக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி அடித்து தி.மு.க-வினர் பயன்படுத்திய காரையும் சிறை பிடித்துள்ளனர் என்று பரணி டிவியின் வீடியோ தொகுப்பு தெரிவிக்கின்றது.
கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுக்கள் சுமார் 50 லட்சம் மற்றும் காரையும் சிறை பிடித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

https://www.youtube.com/watch?feature=youtu.be&v=5XgngZoSexE&app=desktop

Next Story
கதிர் தொகுப்பு
Trending News