Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க வின் புதிய அத்தியாயம் - "இந்து மத எதிரியல்ல நாங்கள்".! #DMK #MKStalin #Hindhu

தி.மு.க வின் புதிய அத்தியாயம் - "இந்து மத எதிரியல்ல நாங்கள்".! #DMK #MKStalin #Hindhu

தி.மு.க வின் புதிய அத்தியாயம் - இந்து மத எதிரியல்ல நாங்கள்.!  #DMK #MKStalin #Hindhu

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 July 2020 10:53 AM GMT

தி.மு.க வின் அடுத்த மிகப்பெரிய குறி என்பது இந்து'க்களின் வாக்கு வங்கி. அதனை குறி வைத்தே அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகி வருகிறது. இன்று பா.திருமாவேலன் எழுதிய கட்டுரை ஒன்றை அறிவாலயத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் பகிர்ந்துள்ளது.

அதில் மு.கருணாநிதி முதல்வராக இருந்த பொழுது அறநிலைய துறை அமைத்தார் எனவும், அவர் ஆட்சியில் செய்த கோவில் குடமுழுக்குகளையும், கோவில் திருப்பணிகளையும் பட்டியலிட்டு இந்துக்களின் எதிரியல்ல தி.மு.க என நீண்ட கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.

தி.மு.கவிற்கு இந்து சமுதாய மக்களின் சார்பாக சில கேள்விகள்.

* இந்துக்களின் எதிரியல்ல என கூறும் தி.மு.க இந்துக்களின் உணர்வுகளை எந்த அளவிற்கு மதித்தது என்று கூறமுடியுமா? இஸ்லமிய, கிறுஸ்திவ பண்டிகைகளை தன் பண்டிகை போல் நினைத்து கொண்டாடும் திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஒரு இந்து கோவிலின் முன் நின்று அர்ச்சகர்கள் வைக்கும் விபூதியை அழிக்க காரணம் என்ன? விபூதி என்பது இந்து மத அடையாளத்தின் அடிநாதம் என அறியாத தி.மு.க இப்பொழுது இந்து மத நட்பு பாராட்டுகிறது.

* வழிபாட்டு தலங்கள் என்பது இந்து மதத்தின் சாரம்சம், ஒவ்வோர் இந்துவும் அவன் வணங்கும் ஆலயங்களின் முன் "அதை கடவுள் இல்லை" என முழக்கமிட்ட ஈ.வே.ராவின் சிலை இருப்பதை தி.மு.க ஊக்குவிக்கிறதா? அன்று கருச்சட்டைகாரர்களின் ஓட்டிற்காக ஈ.வே.ரா சிலை வைத்து இன்று காவி சட்டைகாரர்கள் விழிப்புணர்வு ஏற்பட்ட உடன் இந்து மத எதிரியல்ல என பம்முகிறதா?

* திருப்பதி ஏழுமலையானின் பெருமையை கனிமொழி இழிந்து பேசும் போது அவரை "அவ்வாறு பேசாதே தவறு, நாம் இந்து மத எதிரியல்ல" என கண்டிக்க இயலாமல் இப்பொழுது நீலி கண்ணீர் வடிக்கிறது தி.மு.க.

* திராவிடர் கழக தலைவர்கள் சூரிய கிரகணத்தை அவமதிப்பதாக கூறி கிரகணத்தன்று சாப்பிடும் பொழுது "ஓசி சோறு சாப்பிடுவது உங்கள் இஷ்டம் ஆனால் அதை இந்துக்களின் நம்பிக்கை சூரிய கிரகணத்தை அவமதித்து சாப்பிடாதே" என கூற அருகதை இல்லாமல் இப்பொழுது என்ன நாடகம்?

* ஒரு மனிதனின் வாழ்நாள் நம்பிக்கை என்பதை சிதைப்பது அவனை அவமதிக்கும் செயலாகும். இந்து மத கடவுளின் துவேஷத்தை ஆதரிக்கும் உங்களுக்கு இப்பொழுதான் இந்து மதம் எதிரியல்ல என புரிகிறதா திராவிட முன்னேற்ற கழக தலைமையே?

* கடவுள் இல்லை என்றால் சிவனும் இல்லை, பெருமாளும் இல்லை, விநாயகரும் இல்லை, முருகரும் இல்லை, அல்லாவும் இல்லை, ஜீசஸும் இல்லை என கூற முதுகெலும்பற்று அல்லா உண்டு, ஜீசஸ் உண்டு, ஆனால் சிவன், பெருமாள், விநாயகர், முருகன் மட்டும் இல்லை என்பதை இந்து மத துவேஷம் என்று கூறாமல் வேறு என்ன கூற முடியும் இந்து மத விரோதியே?

கருப்பு சட்டை காரர் பெருமளவில் இருந்த பொழுது உங்களுக்கு கருப்பு சட்டை முக்கியம். இப்பொழுது காவி நிற ஆடைகளின் ஒருங்கிணைப்பால் காவிகளின் எண்ணிக்கை அதிகமாகும் பொழுது இந்து மதம் எதிரியல்ல என கோஷம்! இதற்கு பெயர் கொள்கையல்ல தி.மு.க தலைமையே!

இறுதியாக கறுப்பர் கூட்டத்தின் கந்த சஷ்டி அவமதிப்பு விவகாரத்தில் சொந்தமாக சாட்டிலைட் சேனல், பண்பலை, தின செய்திதாள், வாரபத்திரிக்கை, எண்ணற்ற சமூக வலைதள அதிகாரப்பூர்வ கணக்குகள் என ஆயிரம் இருந்தும் இரண்டு வரி "இந்து மத துவேஷம் தவறு கறுப்பர் கூட்டமே" என அறிக்கை கூட விடாத கபடவேஷதாரிகளின் சமீபத்திய வேஷம் "இந்து மத எதிரியல்ல தி.மு.க".

"விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டோர்" - இந்துக்கள் விழித்துக் கொண்டோர், பிழைத்துக்கொள்ளுங்கள் திராவிட முன்னேற்ற கழக தலைமையே

Next Story
கதிர் தொகுப்பு
Trending News