Kathir News
Begin typing your search above and press return to search.

இந்துக்களே வந்துடுச்சு ஸ்டாலின் ட்விட் - அப்பவும் எடப்பாடி க்கு தான் ஆணையிடுகிறார்.! #DMK #MKStalin #KarupparKootam #EPS

இந்துக்களே வந்துடுச்சு ஸ்டாலின் ட்விட் - அப்பவும் எடப்பாடி க்கு தான் ஆணையிடுகிறார்.! #DMK #MKStalin #KarupparKootam #EPS

இந்துக்களே வந்துடுச்சு ஸ்டாலின் ட்விட் - அப்பவும் எடப்பாடி க்கு தான் ஆணையிடுகிறார்.! #DMK #MKStalin #KarupparKootam #EPS

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 July 2020 11:47 AM GMT

கடந்த பத்து நாட்களாக இந்துக்கள் மீதும், இந்த மத நம்பிக்கைகள் மீதும் அவதூறுகளும், விமர்சனங்களும், தாக்குதல்களும் வந்த வண்ணம் உள்ளன. அவற்றுள் முக்கியமானது இரண்டு ஒன்று கறுப்பர் கூட்டம் கந்த சஷ்டி அவமதிப்பு மற்றொன்று கோவையில் 3 கோவில்கள் மர்ம நபர்களால் சேதப்படுத்த பட்டது. இந்த விஷயங்களில் இந்துக்களின் மீது அக்கரையுள்ளவர்கள் எதிர்ப்பு மற்றும் ஆர்ப்பாடம் போன்று தங்களால் இயன்ற அளவு செய்து வருகின்றனர். இயலாதவர்கள் குறைந்தபட்சம் தங்களது அறிக்கையாவது விட்டு விடுகின்றனர். இந்துக்கள் எக்கேடு கெட்டு போனால் என்ன என்று நினைப்பவர்கள் மட்டுமே இதில் வாயடைத்தாற்போல் ஏதும் கூறாமலேயே அமைதி காத்து வருகின்றனர். அவர்களில் முக்கியமானவர் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

இது பற்றி ஓரிரு வார்த்தைகள் கூட கூற மனம் வராமல் பிடிவாதம் பிடிக்குறார். இது பற்றி பலர் பேசியபோதும் இந்துக்கள் ஆதரவு நமக்கு ஏன் என்கிற தோணியிலேயே அலைகிறார். அது அவர் விருப்பம். ஆனார் இன்று அத்தி பூந்தாற்போல் ஒரு ட்விட் அவர் சார்பாக வந்துள்ளது அதுவும் கறுப்பர் கூட்டம் பற்றி கண்டுகொண்டதாக தெரியவில்லை மாறாக நேற்று கோவையில் 3 கோவில்கள் சேதப்படுத்தபட்டது பற்றிய அறிக்கையாகும்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் "கோவையில் நேற்று மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது.

பேரிடர் காலத்தில் அதிமுக்கியப் பிரச்சினைகளிலிருந்து, பொது கவனத்தை திசை திருப்பாதவண்ணம், குற்றம் புரிந்தோர் உடனடியாக சட்டத்தின் முன்னே நிறுத்தப்படுவதை @CMOTamilNadu உறுதி செய்ய வேண்டும்."

என்று பதிவேற்றி உள்ளார். அப்பொழுதும் ஏதோ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி'க்கு ஆணையிடும் தோணியில் தான் அந்த செய்தி இருந்ததே தவிர அதில் இந்துக்களின் வேதனைக்காக ஆறுதல் வார்த்தைகளோ, அல்லது அவற்றுக்கு காரணமான கயவர்களை பற்றியோ துளியும் இல்லை.



ஒருவேளை இன்று ஞாயிற்றுகிழமை ஆதலால் எங்கும் வெளியில் செல்ல முடியாத சூழலில் "அரசியல் கன்டண்ட்" எனப்படும் அரசியலின் "முக்கிய நிகழ்வுகள்" வேறு இல்லாத பட்சத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் இதை கையில் எடுத்திருக்க கூடும். பாவம் இன்று முழு ஊரடங்கு வேறு அல்லவா அவர் என்ன செய்வார்?

Next Story
கதிர் தொகுப்பு
Trending News