அரசியல் செய்ய ஏதும் இல்லையா? கூட்டு உடனே அனைத்து கட்சி கூட்டத்தை - தி.மு.கவின் கூத்து.! #DMK #MKStalin #TNgovt
அரசியல் செய்ய ஏதும் இல்லையா? கூட்டு உடனே அனைத்து கட்சி கூட்டத்தை - தி.மு.கவின் கூத்து.! #DMK #MKStalin #TNgovt

அரசியல் செய்ய ஏதும் இல்லையா? அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவோம் என்கிற கொள்கையில் தி.மு.க செயல்பட்டு வருவதாக தெரிகிறது. ஆம் நேற்று நடந்த தி.மு.க அனைத்து கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவுகள் பின்வருமாறு,
காணொலி வழியாக நடந்த கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
* கொரோனா மரணங்கள் மறைத்த அ.தி.மு.க. அரசுக்குக் கண்டனம்.
- அதாவது அரசே மரணங்களை மறைக்கவில்லை என தெளிவாக ஆதரங்களை கூறும் பொழுது அதனை அரசியல் ஆக்க ஒரு தீர்மானம்.
* கொரோனா காலத்தில் வற்றிவிட்ட வாழ்வாதாரத்தை மீட்க, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் பண உதவி வழங்க வேண்டும்
- இலவச ரேஷன் பொருள்கள், அனைத்து EMI போன்றவற்றிலும் இருந்து விலக்கு, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கா வண்ணம் செயல்படும் அரசை குறை சொல்ல இது புது காரணம்.
* பாதிக்கப்பட்ட- உயிர்த் தியாகம் செய்த கொரோனா கள வீரர்களுக்கான நிதியுதவி.
- அரசே கொரோனோ களபணியில் இறந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்த பொழுதும் அதை மீண்டும் வழங்க வேண்டும் என அறிக்கை அதாவது நடைமுறையில் இருப்பதை தங்களால் நடைபெற்றது என காட்டி கொள்ள.
* உள்ளாட்சிகளின் அதிகாரத்தைப் பறிப்பதைக் கைவிட்டு - அனைத்து உள்ளாட்சிகளுக்கும் உரிய நிதி வழங்கிட வேண்டும்.
- கொரோனோ காலகட்டத்தில் நிதிகள் சரியாக செலவழிக்க ஒரே குடையின் கீழ் ஒருங்கினைத்தால் தான் அது நடக்கும் என அரசே அதனை செயல்படுத்தும் பொழுது இதனை செலவு செய்ய உள்ளாட்சிகளின் பதவியில் இருப்பவர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டி இந்த கோரிக்கை. ஏனெனில் அரசாங்க பணத்தை தாங்கள் செலவு செய்துவிட்டு விளம்பரம் செய்ய தி.மு.க திட்டம்.
* அரசியல் கண்ணோட்டத்துடன் நடக்கும் காவல் துறை இந்தப் போக்கை கைவிட்டு, நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
- காவல்துறை செயல்பாடுகள் இந்த கொரோனோ காலகட்டத்தில் மிகுத்த பணிச்சுமையின் காரணமாக இருப்பினும் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் விபரீதங்களை ஒட்டுமொத்த காவல் துறையின் விபரீதமாக சித்தரிக்கும் முயற்சி.
* பிற்படுத்தப்பட்டோர் - பட்டியலினத்தோர் - பழங்குடியினர் இடஒதுக்கீடுகளை முழு வீச்சில் செயல்படுத்திட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- இதனை சரியாக செயல்படுத்தினாலும் அதிலும் குறை.
ஆக அரசியல் செய்ய ஏதும் இல்லையா? கூட்டு உடனே அனைத்து கட்சி கூட்டத்தை என்கிற கூத்தை நடத்தி கொண்டிருக்கிறது தி.மு.க.