ஓட்டு வாங்க வந்ததுக்கு அப்பறம் ஒருமுறையாவது வந்தீங்களா? கேள்வி கேட்ட பெண்ணை தரக்குறைவாக பேசிய தி.மு.க எம்.பி அ.ராசா!
ஓட்டு வாங்க வந்ததுக்கு அப்பறம் ஒருமுறையாவது வந்தீங்களா? கேள்வி கேட்ட பெண்ணை தரக்குறைவாக பேசிய தி.மு.க எம்.பி அ.ராசா!
By : Kathir Webdesk
கேள்வி கேட்ட பெண்ணை ஒருமையில் பேசிய நீலகிரி திமுக பாரளுமன்ற உறுப்பினர் அ. இராசாவின் வாகனத்தை மறித்து அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வந்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 6 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நீலகிரி சென்ற தி.மு.க. தலைவர் ஸ்டாலின், வழக்கம்போல போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, 10 கோடி ரூபாய் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சின்ன, சின்ன பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
நீலகிரியில் 140 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அவைகளை சரி செய்ய எவ்வளவு நிதி தேவை என்பது அனைவருக்கும் தெரியும். இது ஒருபுறம் இருக்க, ஏதோ இவர் தனது கையில் இருந்து மக்களுக்கு பணம் கொடுப்பதுபோல மக்களை முட்டாள்கள் ஆக்கிவிட்டு சென்னைக்கு பறந்துவிட்டார்.
இந்த நிலையில் திமுக நீலகிரி பாரளுமன்ற உறுப்பினர் அ.ராசா உதகை காந்தல் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை சாவகாசமாக பார்க்க சென்றார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நீங்க ஓட்டு வாங்க மட்டும் வந்தீர்கள் இத்தனை நாள் எங்கே என்று கேட்ட பெண்களை பார்த்து ஒருமையில் தரைகுறைவாக பேசினார்.
இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் அ.ராசாவின் வாகனத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து, காவலர்களின் உதவியுடன், உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறினார்.