பஞ்சமி நிலத்தில் கல்லூரி கட்டும் தி.மு.க எம்.பி.ஜெகத்ரட்சகன் - தட்டி கேட்ட வி.சி.க'வினரை போலீசை வைத்து 'தட்டி' அனுப்பினார்
பஞ்சமி நிலத்தை தி.மு.க எம்.பி அபகரிக்க முயற்சி செய்யும் விவகாரம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By : Mohan Raj
பஞ்சமி நிலத்தை தி.மு.க எம்.பி அபகரிக்க முயற்சி செய்யும் விவகாரம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ் இடையாளம் பகுதியில் தி.மு.க எம்.பி.ஜெகத்ரட்சகன் புதிய கல்லூரி ஒன்றினை கட்டி வருகிறார். கல்லூரிக்கு தேவையான இடங்களை பட்டியல் சமூக மக்களிடம் இருந்து அபகரித்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மயிலம் சட்டமன்ற தொகுதி செயலாளர் செல்வ சீமான் 50 மேற்பட்ட மக்களுடன் சென்று கல்லூரி அமையும் இடத்திற்கு நியாயம் கேட்க சென்றுள்ளார்.
இதையடுத்து வி.சி.க மற்றும் தி.மு.க'விற்கும் இடையில் வாக்குவாதம் முற்றியது, இதனை தொடர்ந்து நேரடியாக களத்திற்கு வந்த மயிலம் காவல்துறையினர் வி.சி.க;வினர் மீது எச்சரித்து அவர்களை அப்புறப்படுத்தி உள்ளனர். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த வி.சி.க நிர்வாகி விழுப்புரம் முழுவதும் தி.மு.க'வை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து போஸ்டர் ஒட்டி இருக்கிறார்.
இதை அறிந்து திருமாவளவன் கூட்டணிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற தி.மு.க எம்.பி'யை தட்டி கேட்ட அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கம் செய்துள்ளார்.
