Kathir News
Begin typing your search above and press return to search.

உண்டி குலுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக மட்டும் கொடுத்த ரூ.25 கோடி: அப்பாவித் தோழர்களை பதறவைத்த பிரமாணப் பத்திரம்!!

உண்டி குலுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக மட்டும் கொடுத்த ரூ.25 கோடி: அப்பாவித் தோழர்களை பதறவைத்த பிரமாணப் பத்திரம்!!

உண்டி குலுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக மட்டும் கொடுத்த ரூ.25 கோடி: அப்பாவித் தோழர்களை பதறவைத்த பிரமாணப் பத்திரம்!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Sep 2019 7:39 AM GMT


இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தேர்தல் நன்கொடை என்ற பெயரில் திமுக ரூ. 25 கோடி கொடுத்துள்ளதாக தேர்தல் ஆணைய பிரமாணப் பத்திரங்களில் வெளியாகியுள்ள தகவலால் அரசியல் அரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டதுடன் ஏழை பாங்காளர்களின் தோழர்கள் என்று தங்களை மார்தட்டிக் கொள்ளும் கம்யூனிஸ்ட்களுக்கு பெருத்த அவமானமும் ஏற்பட்டுள்ளது.


ஒவ்வொரு தேர்தல் முடிந்த பின்னரும் கட்சிகள் அது தொடர்பான வரவு- செலவு விபரங்களை, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். அந்த வகையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கணக்குகளை கட்சிகள் சமர்ப்பித்து வருகின்றன. அந்த பிரமாணப் பத்திரங்களை மேற்கோள் காட்டி ஊடகங்களில் பின் வருமாறு செய்திகள் வெளியாகியுள்ளன.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஜூலை 10 மற்றும் செப்டம்பர் 13 ஆகிய இரு தேதிகளில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தேர்தல் செலவு தோராயமாக ரூ. 7.2 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதுவரை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை.


இந்த நிலையில் திமுக தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ. 10 கோடியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ. 15 கோடியும் தேர்தல் நிதியாக அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் மொத்த செலவு ரூ. 70 கோடி என்றும், அதில் ரூ. 40 கோடி கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் நிதியாக வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மார்க்சிசிஸ்டுக்கு ஏப்ரல் 5, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மூன்று தவணைகளாகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தவணைகயாகவும் நிதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் நிதி பெற்றது பற்றி விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.


இந்த விபரம் பற்றி சிபிஎம் பொலிட் பீரோ உறுப்பினர் சலிமிடம் ஐ.ஏ.என்.எஸ் ஊடகம் கேள்வி எழுப்பியது, அப்போது 'தேசிய அளவில் திமுகவுடன் கூட்டணி இல்லை என்பதால் அதுகுறித்து தமிழக மாநிலத் தலைமைதான் பதிலளிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.


இந்த நிலையில், பாஜக செய்தித்தொடர்பாளர் நலின் கோஹ்லி இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த விஷயம் தற்போது தேசிய அளவில் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. ஒரு மாநிலக் கட்சியான திமுகவே கம்யூனிஸ்ட்களுக்கு இவ்வளவு வாரி வழங்கி இருக்கிறதென்றால் மற்ற கட்சிகளிடம் இருந்தும், சங்கங்களிடம் இருந்தும், பொது வசூலாகவும் கம்யூனிஸ்டுகளுக்கு எவ்வளவு தொகை சென்று இருக்கும் என்பது பிரம்மிப்பூட்டுவதாக உள்ளது.


மேலும் ஊழல் கட்சிகள் கொடுக்கும் நன்கொடையில்தான் தங்கள் தலைவர்கள் கோடிக்கணக்கில் மதிப்பு மிக்க ஆடம்பரக் கார்களில் பவனி வருகிறார்களோ என்கிற ஐயமும் அப்பாவி தோழமைகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது.


https://www.dinamani.com/tamilnadu/2019/sep/23/dmk-poll-affidavit-says-it-gave-money-to-cpi-cpm-3240642.html


Next Story
கதிர் தொகுப்பு
Trending News