தி.மு.க ஆர்.எஸ்.பாரதி'க்கு புத்திமதி கூறி அனுப்பிய நீதிபதி.! #dmk #rsbharathi
தி.மு.க ஆர்.எஸ்.பாரதி'க்கு புத்திமதி கூறி அனுப்பிய நீதிபதி.! #dmk #rsbharathi

தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு நீதிபதி புத்திமதி கூறி அனுப்பியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த கலைஞர் வாசகர் வட்டம் என்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்டவர்கள் குறித்தும், நீதிபதிகள் குறித்தும் தன் மனதில் பட்டதை மேடை என்று கூட பார்க்காமல் வழக்கம்போல் பேசினார். இதனை தொடர்ந்து அவர் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யயப்பட்டது.
இந்த வழக்கின் நேற்றைய விசாரணையின் போது, ஆர்.எஸ்.பாரதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் "ஆர.எஸ்.பாரதி பேசியதாக சொல்லப்படும் இந்த வழக்கில் அதற்க்கு ஆதாரமாக ஒரே ஒரு சி.டி மட்டுமே உள்ளது இதை எப்படி ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியும்"என ஆர.எஸ்.பாரதி பேசவே இல்லை போன்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.சதீஸ்குமார், இந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். மேலும், "எதிர்காலத்தில் எத்த ஒரு பிரிவினர்க்கு எதிராகவும் பேசக்கூடாது" என புத்திமதியும் கூறி அனுப்பி வைத்தார்.