Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க. ஆட்சியில் தொடங்கிய விஞ்ஞான கொள்ளை! ரூ.10,000 கோடி இந்து கோயில் சொத்துக்கள் மாயம்!!

தி.மு.க. ஆட்சியில் தொடங்கிய விஞ்ஞான கொள்ளை! ரூ.10,000 கோடி இந்து கோயில் சொத்துக்கள் மாயம்!!

தி.மு.க. ஆட்சியில் தொடங்கிய விஞ்ஞான கொள்ளை! ரூ.10,000 கோடி இந்து கோயில் சொத்துக்கள் மாயம்!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Sept 2019 12:42 PM IST



தமிழகம் முழுவதும் இந்து கோயில் சொத்துக்கள் 25,868 ஏக்கர் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.10,000 கோடிக்கு மேல். இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் சொத்துக்களின் நிலப்பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கியதில், இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 38000-க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களின் நில பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான சரிபார்ப்பின்போது, ஏராளமான கோவில்களின் சொத்துக்கள் மோசடியாக தனிநபர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


இதுதவிர, பல அதிர்ச்சிகரமான தகவல்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.கோயில் சொத்துக்கள், கோயில்களின் பெயர்களிலோ அல்லது சாமிபெயர்களிலோதான் பதிவு செய்யப்பட்டு இருக்கும். இதனை பயன்படுத்தி மோசடி பேர்வழிகள் கோயில் அல்லது சாமி யெரிலில் உள்ள ஒருவரின் பெயரில் அந்த கோயில் சொத்தை, மாற்றி எழுதி கொள்ளையடித்துள்ளனர்.


உதாரணமாக, சென்னையில் உள்ள கபாலீஸ்வர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை, கபாலி என்பவன் பெயருக்கு மாற்றி பதிவு செய்துள்ளனர். பார்த்தசாரதி கோயில் சொத்தை, பார்த்தசாரதி என்பவன் பெயருக்கு மாற்றி பதிவு செய்துள்ளனர். மாரியம்மன் கோயில் சொத்தை, மாரியம்மாள் என்பவள் பெயருக்கு மாற்றி பதிவு செய்து மோசடி செய்துள்ளனர்.


கோயில் சொத்துக்களை அரசியல்வாதிகள்தான் அதிக அளவில் அபகரித்துள்ளனர். அதே போல அரசியல்வாதிகள் ஆதரவுடன், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவைகளும் தாரளமாக கொள்ளையடித்து உள்ளன.


இப்படி தழிழகம் முழுவதும் உள்ள இந்து கோயில் சொத்துக்களை பதிவு செய்து கொள்ளையடித்துள்ளது அம்பலத்துக்கு வந்துள்ளது. இதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர். ஆட்சியாளர்களும் உடந்தையாக இருந்து உள்ளனர்.


இந்த விஞ்ஞான ரீதியிலான இந்து கோயில் கொள்ளை தி.மு.க ஆட்சியில்தான் முதன் முதலில் தொடங்கி உள்ளது. அதேபோல, அடுத்தடுத்து வந்த தி.மு.க ஆட்சிகளின்போது, கோயில் சொத்து கொள்ளை ஏகபோகமாக நடந்துள்ளன. அ.தி.மு.கவினரும் இதில் விதி விலக்கு அல்ல.


கொள்ளையடிக்கப்பட்ட இந்து கோயில் சொத்துக்களை மீட்பது ஒருபுறம் இருக்க, கொள்ளையடித்த நபர்கள், நிறுவனங்கள், இதற்கு துணைபோன இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், உடந்தையாக இருந்த அரசியல்வாதிகள் ஆகிய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே பத்கர்களின் எதிர்பார்ப்பு.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News