ரியல் எஸ்டேட்டில் கொடிகட்டி பறந்த பாலாஜி! நிலத்தகராறில் கழுத்தறுத்து வெட்டி சாய்க்கப்பட்ட தி.மு.க. செயலாளர்!
ரியல் எஸ்டேட்டில் கொடிகட்டி பறந்த பாலாஜி! நிலத்தகராறில் கழுத்தறுத்து வெட்டி சாய்க்கப்பட்ட தி.மு.க. செயலாளர்!
By : Kathir Webdesk
விழுப்புரத்தில் தி.மு.க. செயலாளர் பாலாஜி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் விழுப்புரம் 33 வது வார்டு தி.மு.க. செயலாளராக இருந்து வருகிறார். அது போக லாரிக்கு பாடி கட்டும் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார்.
சமீபத்தில் பாலாஜியின் ஒர்க்ஷாப் பகுதியில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள ஓட்டல் எதிரே பள்ளத்தில் ஒருவர் பிணமாக கிடப்பதாக காவல்துறையினர் தகவல் வந்துள்ளது. அங்கே சென்று பார்த்து விசாரணை மேற்கொண்ட பொழுது அது பாலாஜி தான் என்பதை காவல்துறையினர் உறுதிபடுத்தியுள்ளனர்.
பாலாஜி கழுத்து அறுப்பட்டு கொலை செய்யப்பட்டதுடன், நள்ளிரவில் மர்ம நபர்கள் கொடூரமாக கொன்று சாலை ஓர பள்ளத்தில் வீசி சென்று உள்ளனர்.
விசாரணையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு பாலாஜி சின்னசேலம் பகுதியில் உள்ள உறவினர் இடம் ஒன்றை விற்பனை செய்தார். இதனை விற்பனை செய்ததில் பாலாஜிக்கும், அவரது நெருங்கிய உறவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
எனவே அவர்தான் புதுவையை சேர்ந்த கூலிப்படையை ஏவி பாலாஜியை கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்து உள்ளது. உறவினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.