மது போதையில் பள்ளி சி.சி.டி.வி கேமராவை உடைத்த தி.மு.க. உடன்பிறப்பு! தொடரும் அட்டூழியம்!
மது போதையில் பள்ளி சி.சி.டி.வி கேமராவை உடைத்த தி.மு.க. உடன்பிறப்பு! தொடரும் அட்டூழியம்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கீழமட்டையான் கிராம தி.மு.க. கிளைச் செயலாளர் சித்தாண்டி. இவர் அண்மையில் மேலக்கால் ஊராட்சி துணை தலைவராக பதவியேற்றார்.
அப்பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளி அருகே அவருடைய நண்பர்களுடன் வழக்கமாக மது அருந்துவார். மது அருந்திவிட்டு இவர்கள் செய்யும் ரகளைகளையும் மற்றும் அட்டகாசத்தையும் தாங்க முடியாமல் பள்ளிக்கு பாதுகாப்பு தரும் நிலையில் தனியார் அமைப்பு ஒன்று நான்கு இடத்தில் சி.சி.டி.வி கேமராவை அமைத்து தந்தது.
இதனால் கோபமடைந்த சித்தாண்டி, இரண்டு முறை சி.சி.டி.வி கேமராவை உடைத்து எறிந்துள்ளார். அந்த இரண்டு முறையும் தனியார் அமைப்பு கேமராவை மாற்றிக் கொடுத்துள்ளது.
இதற்கு இடையே நண்பர்களுடன் போதையில் சென்ற சித்தாண்டி, நண்பர் ஒருவரை அழைத்து பள்ளி அருகே உள்ள கேமராவை கீழே இருந்த கற்களால் எறிந்து உடைக்கும் காட்சி அந்த கேமராவில் பதிவு ஆகியுள்ளது.
பள்ளி சிறுவர்கள் உள்பட கிராம மக்கள் கேமராவை உடைக்க வேண்டாம் என கூறியும் அதை பெரிதும் எடுத்துக்கொள்ளாமல் போதையில் கேமராவை உடைத்ததால் அப்பகுதி முழுவதும் பதற்றம் எற்பட்டது. தனியார் அமைப்பு அந்த ஊராட்சி மன்ற துணை தலைவர் சித்தாண்டி மீது காடுபட்டி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கொண்டு புகார் கொடுத்ததால் ஊராட்சி மன்ற துணை தலைவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
Source:- News 18 Tamil