Kathir News
Begin typing your search above and press return to search.

விபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு!!

விபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு!!

விபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Aug 2019 1:14 PM IST

புதுக்கோட்டை கம்பன் நகரைச் சேர்ந்த சண்முகசுந்தரம். இவர் தனது மனைவியுடன் காரில் தஞ்சாவூர் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அவரின் கார், கந்தர்வகோட்டை மெய்இடிபட்டி சாலையை கடந்தபோது அங்குள்ள பாலத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் கணவன்-மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அந்தவழியாக வந்தவர்கள், விபத்தில் உயிரிழந்தவர்களை பரிதாபத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த சோகமான நேரத்திலும் திமுக திருடன் ஒருவன் இறந்துகிடந்த பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடியுள்ளான்.

கூட்டத்தில் பலர் திரண்டிருந்த நேரத்திலும், மிகவும் சிரமப்பட்டு மோதிரத்தை உருவிய புகைப்படத்தில் தெளிவாக பதிவாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, மோதிரத்தை திருடிய திமுக திருடன், திமுக கரை வேட்டி கட்டியிருப்பதும் புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது.
https://youtu.be/Td6_5MShp-E
விபத்து நடந்தவுடன் உதவிக்கு ஓடிவரும் நபர்களிடையே, இப்படிப்பட்டவர்களும் இருப்பது மனிதநேயம் குறித்த கேள்வியை நம்முன் எழுப்புகிறது.

இதுவரை பிரியாணி கடை, பச்சி கடை, துணிக்கடை என்று திருடி வந்த திமுகவினர், இப்போது பிணத்தின் மீது உள்ள நகைகளை திருடும் மனிதாபி மானமே இல்லாத நிலைக்கு சென்றுள்ளனர்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News