தி.மு.க தலைவர் ஸ்டாலினின் பேச்சை போலவே பிழைகளாக இருக்கும் தி.மு.க-வின் அறிக்கை : இவர்களா தமிழை வளர்ப்பார்கள்? வாட்சப் வைரல்
தி.மு.க தலைவர் ஸ்டாலினின் பேச்சை போலவே பிழைகளாக இருக்கும் தி.மு.க-வின் அறிக்கை : இவர்களா தமிழை வளர்ப்பார்கள்? வாட்சப் வைரல்
By : Kathir Webdesk
காஷ்மீரில் ஜனநாயகத்தை பாதுகாக்க வலியுறுத்துவோம் என்ற பெயரில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் 22ம்தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இரண்டு பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை, தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலும் வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையின் இரண்டாம் பக்கத்தில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டி வாட்சப்பில் பதிவு ஒன்று வளம்வருகிறது.
"சகஜ வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் இன்னும் ஏன் காஷ்மீர் மாநிலம் ஸ்தம்பித்து நிற்பது ஏன் என்பது பற்றியெல்லாம் பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ கவலைப்படுவதாக தெரியவில்லை", என்ற வாக்கியத்தில் இரண்டு முறை ஏன் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
"பொருளாதாரத்தில் திணறி தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்படுகின்ற அவல நிலைமை பற்றி கவலைப்படாமல் அதனால் மக்கள் பாதிக்கப்படுவது குறித்து கண்டு கொள்லாமல் ஒரு மத்திய அரசு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது", என்ற வாக்கியத்தில் கொள்ளாமல் என்ற சொல்லிற்கு பதிலாக கொள்லாமல் என்று இருக்கிறது.
"தேசத் தந்தை மகாத்மா காந்தி" என்பதற்கு பதிலாக மகாத்மாக காந்தி என்று எழுதப்பட்டுள்ளது. "சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் சர்வாதிகார நடவடிக்கைகள் மூலம்", என்று இருக்க வேண்டிய இடத்தில், "சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் சர்வாதிகார நடவடிக்கைகளை மூலம்", என்று இருக்கிறது.
"டெல்லி ஜந்தர் மந்தரில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட அனைத்து கட்சிகளின்", என்று குறிப்பிட வேண்டிய இடத்தில், "டெல்லி ஜந்தர் மந்தரில் ஜனநாயகத்தின் நம்பிக்கைக் கொண்ட அனைத்து கட்சிகளின்", என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மீது என்ற வார்த்தை விடுப்பட்டுள்ளது.
தமிழை வளர்க்கிறோம், தமிழை பேணிக்காக்கிறோம் என்று கூறிக்கொள்ளும் பலம் பொருந்திய மாநில கட்சியான தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ அறிக்கையே இந்த நிலையில் இருக்கையில், இவர்களா தமிழ் மொழியை வளர்ப்பார்கள் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.