முதல்வருக்கு சாபம் விட்ட உதயநிதி - இயலாமையின் வெளிப்பாடா அல்லது காழ்ப்புணர்ச்சியா? #dmk #udhayanithi #tngovt
முதல்வருக்கு சாபம் விட்ட உதயநிதி - இயலாமையின் வெளிப்பாடா அல்லது காழ்ப்புணர்ச்சியா? #dmk #udhayanithi #tngovt

கொரோனோ பேரிடர் பாதிப்பு உலகையே அச்சுருத்தி வருகிறது இதில் வல்லரசு என மார் தட்டிக்கொள்ளும் நாடுகள் கூட என்ன செய்வதன்று விழிபிதுங்கி நிற்கின்றன, மருத்துவத்துறை ஒருபுறம் மக்களை காக்க போரடிக்கொண்டும் மறுபுறம் நிவாரண மருந்தை கண்டுபிடிக்கவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறது. அரசு மக்களின் அன்றாட தேவைகளிக்காக உதவிகளையும், பாதுகாப்புக்காக ஊரடங்கு, உணவிற்க்காக நிவாரணம், இலவச அரிசி, தானியங்களையும தந்து கொண்டிருக்கிறது அதே நேரத்தில் ஊரடங்கு தளர்வு என பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களை கொரோனோ வின் கோரப்பிடியில் பணயம் வைத்து பம்பரமாக மத்திய, மாநில அரசுகள் சுழல்ன்றுகொண்டிருக்கின்றன. ஆனால் இந்த பேரிடர் காலத்தையும் தன் சுயநலத்திற்க்காகவும், எப்பொழுது வாய்ப்பு கிடைக்கும் இவர்கள் மீது பழி சுமத்தலாம் என காத்துக்கொண்டிருக்கின்றன சில காழ்ப்புணர்ச்சி மனங்கள்.
அந்த வகையில் திமுக'வின் செயல்பாடு அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பதை மட்டும் செய்யாமல் இந்தப்பக்கம் மக்களை குழப்பி அதில் இன்பம் காணும் வேலையையும் சீறிய முறையில் செய்து வருகிறது. குறிப்பாக திமுக'வின் பட்டத்து இளவரசர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவேற்றி இருந்தார், அதில் அவர்களின் மொத்த உணர்வும் வெளிப்பட்டிருந்தது.
அந்த பதிவில் "'இதுக்குமேல எல்லாத்தையும் கடவுள் பார்த்துப்பான்' – பக்தர்கள் சொல்லும் கடைசி வார்த்தைகள் இவை. ஆனால் இதைச் சொல்ல ஒரு முதல்வர் எதற்கு? உங்களின் இயலாமையால் எத்தனையெத்தனை மரணங்கள். கடவுள் உங்களைப் பார்த்துக்கொள்ளமாட்டான் @CMOTamilNadu அவர்களே, இருந்தால் உங்களை தண்டிப்பான்" என குறிப்பிட்டிருந்தார்.
மக்களின் ஆண்டவன் நம்பிக்கை என்பது அவர்களின் ஆயுதம். ஒரு சாமானியன் கூட தன் தாய், தந்தையை கூட இழக்கின்ற நேரத்தில் மனமுடைந்து "ஆண்டவன்தான் பாத்துக்கனும்" என்று படைத்தவனின் மேல் நம்பிக்கையை வைத்து வாழ துவங்குவான். இதுவே ஆட்சிபீடத்தில் இருக்கின்ற முதல்வர் "தன்னால் ஆன முழுவதும் தான் செய்துகொண்டிருக்கிறேன், இன்னும் நிறைய செய்ய தயார் ஆனால் அதற்கும் மேல் 'அந்த ஆண்டவன் பார்த்துப்பான்'"என தன் மக்களை நினைத்து ஆண்டவனிடம் முறையிடும் பக்தியை தனது அரசியல் சுயலாபத்திற்க்காக பட்டத்து இளவரசர் இப்படியா கேலிசெய்வார்??
லாபம், நஷ்டம் பார்க்க அரசியல் ஒன்றும் வியாபாரம் இல்லை அது பொது சேவை. மகேசனுக்கு சேவை செய்வதும் மக்களுக்கு சேவை செய்வதும் ஒன்றுதான். இதில் வியாபாரி மட்டுமே லாப நஷ்டம் பார்ப்பான் திமுக'வின் அரசியல் வியாபார அரசியல் என பலமுறை அவர்களே நிருப்பித்து கொண்டிருக்கிறார்கள். தீர்ப்பு மக்களின் கையில்.